இலங்கை

திருகோணமலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான லொறி!

  • October 15, 2025
  • 0 Comments

திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் லொறியொன்று நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வவுனியாவுக்கு மீன்களை ஏற்றிச் சென்ற குறித்த லொறியானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என  பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை

கிளிநொச்சியில் வயல்காணி ஒன்றிலிருந்து 40 மோட்டார் குண்டுகள் மீட்பு

  • October 15, 2025
  • 0 Comments

கிளிநொச்சி(Kilinochchi), முகமாலை, பொத்தார் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இருந்து 40 மோட்டார் குண்டுகளை(mortar rounds) பளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். நில உரிமையாளர் நேற்று (14) பயிரிடுவதற்கு நிலத்தை தயார் செய்யும் போது குண்டுகளை கவனித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையின் (STF) வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, மோட்டார் குண்டுகளை மீட்டனர். […]

பொழுதுபோக்கு

மலையகத்தில் இருந்து சீறிப்பாயும் வேங்கை யோகி ஸ்ரீ… புல்லரிக்க வைக்கும் “லயத்துவாசி”

  • October 15, 2025
  • 0 Comments

இலங்கையில் உள்ள பல கலைஞர்களைப்பற்றி நாம் பார்க்கும் போது வடக்கிலிருந்தவர்களே நினைவுக்கு வருவார்கள். ஆனால் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்த மலையகத்தமிழனை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இன்று நாம் பார்க்கப்போவது “லயத்துவாசி” என்ற பாடல் மூலம் பிரபல்யமடைந்த ஒரு தமிழ் இளைஞனைப் பற்றித்தான். கேகாலை மாவட்டம் புலொத்கொபிட்டிய என்ற இடத்திலிருந்து வந்த, விஜயகுமார் யோகேந்திரன் என்ற இளைஞன், தற்போது பார்போற்றும் இளைஞனாக வளர்ந்துள்ளார். ஒரு மயைகத் தமிழனாக தன் மலையக மக்களுக்காக தன்னால் முடிந்த […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வரி உயர்வு தொடர்பில் பரிசீலனை!

  • October 15, 2025
  • 0 Comments

G7 நாடுகளின் மத்தியில் பிரித்தானியாவின் பணவீக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் பணவீக்கம் 3.4 சதவீதமாக இருக்கும் எனவும், 2026 ஆம் ஆண்டில் 2.5 சதவீதமாக இருக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கமைய பிரித்தானியாவில் உணவு, விருந்தோம்பல், தொழிலாளர் மற்றும் வரி செலவுகளை துரிதப்படுத்துவது ஆகிய காரணிகள் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராமில்(Instagram) 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள மெட்டா

  • October 15, 2025
  • 0 Comments

இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப்(WhatsApp), இன்ஸ்டாகிராம்(Instagram), பேஸ்புக்(Facebook) மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கின்றன. 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் மெட்டா(Meta) நிறுவனம், 18 வயதுக்குக் குறைவானவர்களால் பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டைக் காட்சிகள் அல்லாத காணொளிகளைப் பார்க்க வழிவகை செய்துள்ளது. இந்த வசதிகளைப் பெற்றோர்களின் அனுமதியின்றி […]

இலங்கை

இலங்கையின் நீதித்துறை அமைப்பு சுதந்திரமாக செயல்படுகிறது – நாமல்!

  • October 15, 2025
  • 0 Comments

இலங்கையின் நீதித்துறை அமைப்பு இன்னும் சுதந்திரமாக செயல்படுவதைக் காண்பது ஊக்கமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன்  மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “போதுமான பொய்கள் சொல்லப்பட்டுள்ளன.  பாராளுமன்றத்தில் எத்தனை திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அல்லது எத்தனை அமைச்சர்கள் மாற்றப்பட்டாலும், அரசாங்கம் தொடர்ந்து நேர்மையற்ற முறையில் செயல்பட்டால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. இருப்பினும், இலங்கையின் நீதித்துறை […]

இலங்கை

இலங்கையின் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது!

  • October 15, 2025
  • 0 Comments

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான இலங்கையின்  முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் வழங்க அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். இதற்கு முன்னதாக குறித்த கைது நடவடிக்கையை தடுப்பதற்காக அவர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இருப்பினும் குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

கென்யாவின் மூத்த அரசியல்வாதி ரைலா ஒடிங்கா (Raila Odinga) காலமானார்!

  • October 15, 2025
  • 0 Comments

கென்யாவின் மூத்த அரசியல்வாதி ரைலா ஒடிங்கா (Raila Odinga) இன்று காலமானார். ஒடிங்கா காலையில் வழக்கமாக மேற்கொள்ளும் நடைபயணத்தின்போது மயங்கி விழுந்த நிலையில் கூத்தாட்டுக்குளத்தில் (Koothattukulam)உள்ள தேவமாதா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக அவரது குடும்பத்தினர் ஒடிங்கா (Odinga) குணமடைந்து வருவதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அவருடைய மறைவுக்கு உலக தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து […]

இலங்கை

இலங்கை முழுவதும் அதிரடி சோதனை நடவடிக்கை – ஆயிரக்கணக்கானோர் கைது

  • October 15, 2025
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முப்படையினர் இணைந்து நேற்று மேற்கொண்ட சோதனையின் போது 4,626 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட சுற்றிவளைப்பின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 19 பேரும், சந்தேகத்தின் பேரில் 601 பேரும் கைது செய்யப்பட்டனர். அத்துடன் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 242 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 160 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேவேளை மதுபோதையில் […]

உலகம்

இந்தோனேஷியாவில் வெடித்து சிதறிய எரிமலை

  • October 15, 2025
  • 0 Comments

இந்தோனேஷியாவில் உள்ள மவுண்ட் லெவோடோபி லக்கி-லாகி (Mount Lewotobi Laki-Laki) எரிமலை இன்று (15) வெடித்துள்ளது. எரிமலை வெடித்ததில் அதிலிருந்து சாம்பல் வானுயர 10 கி.மீ உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டது. இந்நிலையில், அதிகாரிகள் ஆக உயரிய நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளனர். லெவோடோபி லாக்கி லாக்கி எரிமலை கிழக்கு நூசா தெங்காரா (Nusa Tenggara) மாநிலத்தில் உள்ளது. இந்தோனேஷிய நேரப்படி அது அதிகாலை 1.35 மணிக்கு வெடித்ததாக அதிகாரிகள் கூறினர். வெடிப்பு கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்களுக்கு நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. […]

error: Content is protected !!