சென்னையில் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் – இருவர் கைது
சென்னையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள 320 கிலோகிராம் கஞ்சாவை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCB) பறிமுதல் செய்துள்ளது. மேலும், கடத்தல் நடவடிக்கை தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காரனோடை (Karanodai) அருகே ஒரு லாரியை வழிமறித்த சென்னை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 150 கஞ்சா பொதிகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பொதிகள் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. […]













