உலகம் செய்தி

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வெடித்த எரிவாயு சிலிண்டர் – 12 பேர் காயம்

  • November 4, 2025
  • 0 Comments

இஸ்லாமாபாத்தில்(Islamabad) உள்ள பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற கட்டிடத்தின் அடித்தள சிற்றுண்டிச்சாலையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் ஏர் கண்டிஷனிங்கை(குளிரூட்டி) பழுதுபார்க்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், “குளிரூட்டியை பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மிகவும் கடுமையான காயங்களுக்கு ஆளானதாகவும், ஒரு தொழில்நுட்ப வல்லுநரின் உடலில் 80 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்லாமாபாத்தின் காவல்துறைத் தலைவர் அலி நசீர் ரிஸ்வி(Ali Nazir Rizvi) […]

இந்தியா செய்தி

சத்தீஸ்கர் ரயில் விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு(Update)

  • November 4, 2025
  • 0 Comments

இந்தியாவின் சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநில தலைநகர் ராய்ப்பூரில்(Raipur) பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. “இந்த விபத்தில் மொத்தம் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் இன்னும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். 17 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று பிலாஸ்பூர்(Bilaspur) மாவட்ட ஆட்சியர் சஞ்சய் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஏனைய பயணிகளுக்கு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இணைய மோசடியாளர்களுக்கு பிரம்படி தண்டனையை அறிமுகப்படுத்தும் சிங்கப்பூர்

  • November 4, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில்(Singapore) இணைய மோசடி செய்பவர்களுக்கு குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து குறைந்தபட்சம் 06 முதல் 24 பிரம்படிகள் வரை தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட சிங்கப்பூர் 2020 முதல் 2025ம் ஆண்டின் முதல் பாதி வரை மோசடிகள் மூலம் $2.8 பில்லியனுக்கும் அதிகமாக இழந்ததாக உள்துறைக்கான மூத்த துணை அமைச்சர் சிம் ஆன்(Sim Ann) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “மோசடிகளைச் செய்யும் குற்றவாளிகள், முக்கியமாக தொலைதூரத் தொடர்பு மூலம் ஏமாற்றுபவர்கள் குறைந்தது […]

இந்தியா செய்தி

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேர் கைது

  • November 4, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில்(Coimbatore) உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை 20 வயது கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகளுடனான ஒரு சிறிய மோதலுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட தவசி, கார்த்திக் மற்றும் காளீஸ்வரன் கால்களில் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி தனது ஆண் நண்பருடன் இருந்த போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆண் நண்பரைத் தாக்கி காரில் […]

உலகம் செய்தி

மீட்புப் பணியின் போது விபத்துக்குள்ளான பிலிப்பைன்ஸ் விமானப்படை ஹெலிகாப்டர்

  • November 4, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸின்(Philippines) தெற்கில் ஐந்து பணியாளர்களுடன் சென்ற விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி(Kalmaegi) புயலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையின் போது தெற்கு அகுசன் டெல் சுர்(Agusan del Sur) மாகாணத்தில் உள்ள லோரெட்டோ(Loreto) நகருக்கு அருகே சூப்பர் ஹூய்(Super Huey) ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், விமானப்படை வீரர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ஐந்து விமானப்படை வீரர்களின் நிலை மற்றும் விபத்துக்கு என்ன காரணம் என்பது உட்பட […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகர்களின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • November 4, 2025
  • 0 Comments

நடிகை திரிஷா, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மணிரத்னம் வீடுகளுக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில், “சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரிஷா வீடு, அண்னாநகர் பகுதியில் உள்ள விஷால், மணிரத்னம் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து காவலர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அங்கு வெடிகுண்டுகள் ஏதும் இல்லாததால் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. […]

செய்தி விளையாட்டு

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சிறந்த அணியை அறிவித்த ICC

  • November 4, 2025
  • 0 Comments

கடந்த வாரம் இந்தியாவின் நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில், நடந்து முடிந்த தொடரின் சிறந்த வீராங்கனைகள் கொண்ட அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) அறிவித்துள்ளது. அந்த வகையில், அணியின் தலைவராக தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வோர்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த அணியில் இந்தியா(India), தென் ஆப்பிரிக்கா(South Africa) […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தின் விமான நிலையத்தில் இருந்து £2 மில்லியன் மதிப்புள்ள தங்க கட்டிகள் மீட்பு!

  • November 4, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் மென்செஸ்டர் விமான நிலையத்தில் (Manchester Airport) £2 மில்லியன் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி விமான நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இருந்து 07 தங்க கட்டிகளை மீட்டுள்ளனர். அதன் மதிப்பு £700,000 புவண்ட்ஸ் வரை […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsApp செயலியை பயன்படுத்துவதில் சிக்கல் – பலர் முறைப்பாடு!

  • November 4, 2025
  • 0 Comments

உலகம் முழுவதும் WhatsApp செயலியை பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக பலர் முறைப்பாடு அளித்துள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பிரேசில் (Brazil), அமெரிக்கா (US), பெரு (Peru), இத்தாலி (Italy), இங்கிலாந்து (UK )மற்றும் கோஸ்டாரிகா (Costa Rica) ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் சிக்கல்களை முறைப்பாடு அளித்துள்ளனர். சிக்கல் எப்போது சரி செய்யப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை. WhatsApp உலகளவில் மூன்று பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.  

ஐரோப்பா செய்தி

ட்ரோன் மழை பொழிந்த உக்ரைன் – இருளில் மூழ்கிய ரஷ்யா!

  • November 4, 2025
  • 0 Comments

ரஷ்யா மீது உக்ரைன் நேற்று இரவு ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இதில் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகளில் பரவலான தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ரஷ்யாவின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், பல உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. வோல்கோரோட் (Volgorod) மற்றும் குர்ஸ்க் (Kursk) உள்ளிட்ட துணை மின்நிலையங்கள் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டதால் பல பகுதிகள் மின்வெட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரேனிய நகரங்கள் மீதான கிரெம்ளின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நோக்கில் […]

error: Content is protected !!