கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேர் கைது
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில்(Coimbatore) உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை 20 வயது கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை அதிகாரிகளுடனான ஒரு சிறிய மோதலுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட தவசி, கார்த்திக் மற்றும் காளீஸ்வரன் கால்களில் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி தனது ஆண் நண்பருடன் இருந்த போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆண் நண்பரைத் தாக்கி காரில் கடத்தி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் பாதிக்கப்பட்டவரின் நண்பர் பீளமேடு(Peelamedu) காவல் நிலையத்தில் தகவல் அளித்ததை தொடர்ந்து நடந்த மீட்பு நடவடிக்கையின் போது துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் சிகிச்சைக்காக கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





