பொழுதுபோக்கு

தேசிய விருதுகள் மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தகுதியானவை அல்ல

  • November 5, 2025
  • 0 Comments

இந்திய அரசால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதுகளை பிரகாஷ் ராஜ் கடுமையாக சாடியுள்ளார் கேரள அரசின் மாநிலத் திரைத்துறை விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த நடிகருக்கான விருது மம்மூட்டிக்கும் சிறந்த நடிகைக்கான விருது ஷம்லா ஹம்சாவுக்கும் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுக்குழுவின் தலைவராக பிரகாஷ் ராஜ் செயல்பட்டார்.  இந்த நிலையில், விருது அறிவிக்கப்பட்ட நிகழ்வில் பேசிய பிரகாஷ் ராஜ், “இந்த விருதுக்குழுவின் தலைவராகச் செயல்பட என்னை அழைத்து, என் முடிவில் யாரும் தலையிட மாட்டார்கள் என்றபோது மகிழ்ச்சியாக இருந்தது. […]

உலகம்

போஸ்னியாவில் (Bosnian) ஓய்வு பெற்றவர்கள் தங்கும் விடுதியில் தீவிபத்து – பலர் பலி!

  • November 5, 2025
  • 0 Comments

போஸ்னிய (Bosnian)நகரமான துஸ்லாவில் (Tuzla) ஓய்வு பெற்றவர்கள் தங்கும் விடுதியில் நேற்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேல் தளங்களில் முதலில் பரவிய தீ பின்னர் அந்த தளத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பத்து பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  குறைந்தது 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் எனவும்  போஸ்னிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்பு படையினர் சிலரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்த […]

உலகம் செய்தி

அணுவாயுத சோதனை – ட்ரம்பின் குற்றச்சாட்டை மறுக்கும் பாகிஸ்தான்!

  • November 5, 2025
  • 0 Comments

வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இரகசியமாக அணுவாயுத சோதனை செய்வதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்து நிலையில், அந்த கூற்றை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பில் சி.பி.எஸ் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட பாகிஸ்தானின் மூத்த அதிகாரி, தனது நாடு “அணு ஆயுத சோதனைகளை நடத்திய முதல் நாடு அல்ல, மீண்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் திட்டமும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான போர் நிறுத்தத்தை தொடர்ந்து அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. […]

இலங்கை

இலங்கை – இந்திய நாடாளுமன்ற ஒத்துழைப்பை மேம்படுத்த சஜித், ஓம் பிர்லா சந்திப்பில் இணக்கம்!

  • November 5, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்து கலந்துரையாடினார். நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்றத்தில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர். கட்டமைப்பு சார் பரிமாற்றங்கள், கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் மூலம் இலங்கை நாடாளுமன்றத்துக்கும், இந்திய மக்களவைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இருவரும் இணக்கம் தெரிவித்தனர். ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை […]

உலகம்

வாகன டயர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பெரும் அபாயம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

  • November 5, 2025
  • 0 Comments

வாகனங்களுக்குப் பயன்படுத்தும் டயர்கள் காரணமாக மனிதர்களுக்கு பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படலாம் என ஆய்வொன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது. வாகன டயர்கள் தேய்மானம் அடையும் போது, சுமார் 50,000 தொன் நச்சுப் பொருட்கள் காற்று, மண் மற்றும் நீரில் கலக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய சந்தையில் உள்ள பிரிட்ஜ்ஸ்டோன், மிச்செலின் உள்ளிட்ட ஆறு முக்கிய டயர் தயாரிப்புகளின் கலவை பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதன்போது மொத்தம் 1,954 மூலக்கூறுகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 785 மூலக்கூறுகள் “கடுமையான உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் […]

உலகம் செய்தி

நியூயார்க்கின் (New York) முதல் முஸ்லிம் மேயராக தெரிவான சோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani)!

  • November 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயார்க் (New York)  நகர மேயராக ஜனநாயகக் கட்சி வேட்பாளரான 34 வயதான சோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயார்க்கின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் ஆட்சியாளர் இவராவார். இந்தோ-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த மம்தானி (Mamdani) , பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் மீரா நாயரின் மகனும் ஆவார். மம்தானியை “யூத வெறுப்பாளர்” என்று ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை வர்ஜீனியா (Virginia) மற்றும் நியூ ஜெர்சியில்  […]

இலங்கை

பொதுஜன பெரமுன, ஐ.தே.க கூச்சல் குறித்து பொன்சேகா அதிருப்தி

  • November 5, 2025
  • 0 Comments

” மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிபீடமேறுவதற்கு இடமளிக்க கூடாது. இந்நாட்டை நாசமாக்கிய தரப்புகள் இணைந்து நடத்தும் நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்குமளவுக்கு நான் முட்டாள் அல்லன்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட மேலும் சில கட்சிகள் இணைந்து நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பொன்சேகா […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

பார்த்துக்கொண்டே இருக்கலாம் சமந்தாவின் அழகை…

  • November 5, 2025
  • 0 Comments

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நீல நிறத்தில் உடலை ஒட்டியபடி ஒரு உடையுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. பாலிவூட் நடிகைகளுக்கு நிகராக டைட்டான உடையை அணிந்துக் கொண்டு நடிகை சமந்தா போஸ் கொடுத்தாலும், கவர்ச்சியாக இல்லை. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன.

இலங்கை

நுகேகொடை பேரணி குறித்து ராஜித அதிருப்தி – பங்கேற்பது பற்றி இறுதி முடிவில்லை!

  • November 5, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பது தொடர்பில் தான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மேற்படி பேரணிக்கு ஆதரவை வழங்கும் முடிவை கட்சி எடுத்திருந்தாலும், அது பற்றி தான் இன்னமும் பரிசீலித்துவருவதாகவும் ஊடக சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டார். “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்துவருகின்றனர். எனவே, எதிரணி வசம் சிறந்த மாற்று […]

உலகம்

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி – 66 பேர் மரணம்

  • November 5, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸை ஒரு சக்திவாய்ந்த சூறாவளி தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக வலிமையான சூறாவளி இது என்று கூறப்படுகிறது. குறைந்தது 66 பேர் உயிரிழந்துள்ளனர். 400,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மக்கள் வசிக்கும் நகரங்கள் உட்பட பெரிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், சூறாவளி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையிலான அறிக்கைகளின்படி, இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

error: Content is protected !!