உலகம் செய்தி

அமெரிக்காவில் தொடரும் அரசாங்க பணி நிறுத்தம் – வான்வெளியை மூட திட்டம்!

  • November 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் அரசாங்க பணி நிறுத்தம் நீடித்தால் விமான போக்குவரத்து கடும் சிக்கல்களை எதிர்நோக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் வான்வெளியின் சில பகுதிகளை மூடுவதாக அமெரிக்க போக்குவரத்து செயலாளர் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய பயண இடையூறுகளைத் தூண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போக்குவரத்து செயலாளர், “நீங்கள் பெருமளவில் விமான தாமதங்களைக் காண்பீர்கள். பெருமளவில் ரத்து செய்யப்படுவதை நீங்கள் காண்பீர்கள், மேலும் வான்வெளியின் சில பகுதிகளை நாங்கள் மூடுவதை நீங்கள் காணலாம். விமானப் […]

இலங்கை

நீண்டகால பிரச்சினையை தீர்க்க இந்திய – இலங்கை அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – சஜித்!

  • November 5, 2025
  • 0 Comments

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாக மீன்பிடித் தகராறு இருந்து வருவதாகவும், சர்வதேச சட்டத்தின்படி செயல்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘இந்தோ-இலங்கை இருதரப்பு உறவுகள்’ என்ற தலைப்பில் ANI செய்தி நிறுவனத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய நாடுகள் சபையின் […]

ஐரோப்பா செய்தி

ஸ்கொட்லாந்தில் (Scotland) நில விற்பனை – அரசாங்கம் தலையிட வேண்டும் என கோரிக்கை!

  • November 5, 2025
  • 0 Comments

ஸ்கொட்லாந்தில் (Scotland)  தனியார் நில விற்பனையில் அரசாங்கம் தலையிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் சில தனியார் நிறுவனங்கள் அல்லது பிரஜைகள் இடையே அதிகளவிலான நிலங்கள் காணப்படுவதை  நிவர்த்தி செய்ய விரும்புவதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். நில உரிமையாளர்கள் மற்றும் சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்த திட்டங்கள் சர்ச்சைக்குரியவை என விமர்சித்துள்ளனர். இந்த செயற்பாடு கிராமப்புற வணிகங்களை பாதிக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் பலர் இந்த திட்டங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் செல்ல வலியுறுத்துகின்றனர். ஸ்கொட்லாந்தில் நிலம் […]

பொழுதுபோக்கு

பான் வேர்ல்டு AA22xA6 படத்தின் இசை அமைப்பாளரை அறிவித்தார் அல்லு அர்ஜுன்

  • November 5, 2025
  • 0 Comments

புஷ்பா படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரபல்யமான அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அல்லு அர்ஜுன் இதற்கு முன் பல படங்களை நடித்திருந்தாலும் தெலுங்கைத் தாண்டி தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அவரை அடையாளப்படுத்தியது “புஷ்பா” என்று கூறலாம். இந்த நிலையில், அட்லீ இயக்கும் அல்லு அர்ஜுனின் 22ஆவது படமான AA22xA6 பான் இந்திய படமாக இல்லாமல், பான் வேர்ல்டு படமாக உருவாக இருக்கிறது. இப்படம் சுமார் 800 […]

பொழுதுபோக்கு

“நான் அப்படி கூறவே இல்லை” அந்தர் பல்டி அடித்த மாதம்பட்டி ரங்கராஜன்…!

  • November 5, 2025
  • 0 Comments

பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் ஜாய் கிறிஸில்டா இருவரும் சமூக ஊடகங்களில் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு மோதி வருகின்றனர். இதற்கு சற்று மேலாக மாதம்பட்டி ரங்கராஜனின் முதல் மனைவியும் அவ்வப்போது எதையாவது போட்டு கன்டன்ட் கொடுத்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று கிறிஸில்டாவின் குழந்தை தனது குழந்தை என்று ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளிவந்ன. ஆனால் இன்று கதையே மாறி விட்டது. அதாவது நான் […]

பொழுதுபோக்கு

மற்றுமொரு தொடருக்கும் முடிவு கட்டியது ஜீ தமிழ்

  • November 5, 2025
  • 0 Comments

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிக நீண்ட நாட்களாகவும் விருவிருப்பாகவும் ஒளிபரப்பப்பட்டு வந்த மாரி தொடர் 1068 எபிசோடுகளுடன் முடிவடைந்தது. மூடநம்பிக்கைகளையும் அமானுஷ்ய காட்சிகளையும் தெய்வ சக்தியையும் ஒன்றிணைத்து எடுக்கப்பட்ட மாரி தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது. மாரி தொடரின் முதல் பாகம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்து, இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில், இறுதிக்கட்ட கிளைமேக்ஸ் காட்சிகள் கடந்த வார இறுதியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு தொடர் முடிவடைந்தது. இதேவேளை, ஜீ தமிழில் […]

செய்தி

திருமணம் காரணமாக கொழும்பிற்கு இடம்பெயரும் மக்கள் – புள்ளிவிபரம் வெளியீடு!

  • November 5, 2025
  • 0 Comments

இலங்கையில் மூன்று மில்லியன் மக்களில் திருமணம் காரணமாக 40.6 சதவீதம் பேர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த புலம்பெயர்ந்த மக்கள் தொகை 3,167,263 ஆக உள்ளது, இதில் 40.6 சதவீதம் (1,285,909) பேர் முக்கியமாக திருமண காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளனர். வேலைவாய்ப்பு அல்லது வேலை தேடுவதை நோக்கமாகக் கொண்டு (17.1%) வீதமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். குடும்பத் தேவைகள் (16.2%) மற்றும் நிரந்தர குடியிருப்புக்குத் […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இந்தியர்!

  • November 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் தவறுதலாக சுமார் 43 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இந்தியரை நாடு கடத்த இரு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. 1983 ஆம் ஆண்டு  சுப்பிரமணியம் என்பவர் கொலை குற்றச்சாட்டு மற்றும் போதைப்பொருள்  குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்டார். கொலை குற்றச்சாட்டில் அவர் விடுவிக்கப்பட்டாலும், போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்தார். இதற்காக இரண்டரை முதல் ஐந்து ஆண்டுகள் வரை தனித்தனி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனை அவரது ஆயுள் தண்டனையுடன் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட இருந்தது. இந்நிலையில் தண்டனை […]

உலகம் செய்தி

அமெரிக்க விமான விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • November 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கென்டக்கியில் (Kentucky)  சரக்கு விமானம்  விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Louisville Muhammad Ali International Airport ) புறப்பட்ட சரக்கு விமானமானது புறப்பட்ட  சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தின் பணியாளர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி மேலும் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் புதிய கல்வி சீர்திருத்தம் – தேர்வு நேரத்தை குறைக்க தீர்மானம்!

  • November 5, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் பின் தங்கிய மாணவர்களை அடையாளம் காணும் முகமாக GCSE தேர்வு நேரத்தை 03 மணிநேரமாக குறைக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட தேர்வுகளை 8 ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தவும், கட்டாய வாசிப்பு தேர்வை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பின்தங்கிய மாணவர்களை இனங்கண்டு கொள்வதற்கு இந்த நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய கல்வி சீர்த்திருத்தத்தின் கீழ் 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு  AI தொழில்நுட்பம் குறித்த கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் […]

error: Content is protected !!