உலகம் செய்தி

அமெரிக்காவில் வெடித்துச் சிதறிய சரக்கு விமானம் – 12 பேர் பலி – கருப்புப் பெட்டி மீட்பு

  • November 6, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கென்டக்கி மாநிலத்திலுள்ள லூயிஸ்வில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் வெடித்துச் சிதறியுள்ளது. MD-11 என்ற சரக்கு விமானத்தில் பணியமர்த்தப்பட்ட மூன்று பணியாளர்களும், தரையில் குறைந்தது ஒன்பது பேரும் உயிரிழந்துள்ளதாகக் கென்டக்கி மேயர் கிரேக் கிரீன்பெர்க் தெரிவித்துள்ளார். விமானம் விபத்துக்குள்ளான நிலையில், சுமார் 800 மீட்டர் தூரம் வரை தீ பரவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தரையில் பணியில் ஈடுபட்டிருந்த […]

உலகம் முக்கிய செய்திகள்

ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை! பெருந்தொகையானவர்கள் நாடு கடத்தல் – விசாக்கள் நிராகரிப்பு

  • November 6, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கை காரணமாக இந்த பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இதுவரை சுமார் 80,000 குடியேற்றமற்ற விசாக்களை இரத்து செய்ய்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செல்லுபடியாகும் விசாக்கள் வைத்திருந்தவர்கள் கூட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடுகடத்த வழிவகுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, குடிபோதையில் வாகனம் […]

இலங்கை

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் பலி

  • November 6, 2025
  • 0 Comments

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெருமளவானோர் இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மேற்படி காலப்பகுதிக்குள் நீரில் மூழ்கியவர்களில் 195 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 135 உள்நாட்டு பிரஜைகளும், 30 வெளிநாட்டு பிரஜைகளுமே இவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன. சிலாபம், தெதுரு ஓயாவிற்கு நீராடச்சென்றவர்களில் ஐவர் நேற்று நீரில் மூழ்கி பலியானார்கள். […]

உலகம்

புவி வெப்பமயமாதலுக்கு தொழில்நுட்பத் தீர்வு காணும் எலான் மஸ்க்

  • November 6, 2025
  • 0 Comments

புவி வெப்பமயமாதல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு புதிய யோசனையை கோடீஸ்வர வர்த்தகரான எலான் மஸ்க் முன்வைத்துள்ளார். செவ்வாய் கிரகம், விண்வெளிப் பயணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் எலான் மஸ்க், தற்போது புவி வெப்பமயமாதல் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார். அதன்படி, ஒரு பெரிய, சூரிய சக்தியில் இயங்கும் ஏ.ஐ. செயற்கைக்கோள் கூட்டமைப்பு (AI Satellite Constellation), பூமிக்கு வரும் சூரிய ஒளியின் அளவை மிகக் குறைந்த அளவிற்குக் குறைப்பதன் மூலம் புவி வெப்பமயமாதலைத் தடுத்துவிட […]

இலங்கை

இலங்கையில் அரச சேவைக்கு 72,000 புதிய பணியாளர்களை இணைத்துக் கொள்ள அனுமதி

  • November 6, 2025
  • 0 Comments

இலங்கையில் அரச சேவைக்கு 72,000 புதிய பணியாளர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு துறைகளுக்கும் தேவையான ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.” சுகாதாரத் துறைக்கு 9,000 நியமனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 7,200 வெற்றிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். எஞ்சிய நியமனங்களை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க காலத்தில் சேவையின் தேவையைக் கருதாமல், அரசியல் ரீதியான நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் […]

கருத்து & பகுப்பாய்வு

அண்டார்டிகாவில் வேகமாக உருகும் பனிப்பாறை – ஏற்படவுள்ள பேராபத்து

  • November 6, 2025
  • 0 Comments

அண்டார்டிகாவில் உள்ள ஹெக்டோரியா பனிப்பாறை (Hectoria Glacier), இரண்டு மாதங்களில் சுமார் 50 சதவீதம் உருகியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது வரலாற்றில் மிக வேகமாக நிகழ்ந்த உருகும் செயல்பாடாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆய்வை அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி டெட் ஸ்காம்போஸ் (Ted Scambos) மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டனர். பனிப்பாறையின் அழிவை, வியக்கத்தக்க மற்றும் மிகவும் அசாதாரண வேகத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு என டெட் ஸ்காம்போஸ் வர்ணித்துள்ளார். பெரிய […]

உலகம்

விண்வெளியில் அதிரடி காட்டத் தயாராகும் நியூசிலாந்து

  • November 6, 2025
  • 0 Comments

விண்வெளியில் செயற்கைக்கோள்களைச் செலுத்தும் பாரிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. பெரிய அளவில் விண்வெளியில் செயல்படும் விரிவான திட்டங்கள் ஆராயப்படுவதாக, பசிபிக் பிராந்தியத்தின் நியூசிலாந்து விண்வெளித் துறை அமைச்சர் ஜூடித் கொலின்ஸ் (Judith Collins) தெரிவித்துள்ளார். AFP ஊடக நிறுவனத்துடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். பல செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி, தேசிய நலன்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதே நியூசிலாந்தின் முக்கியக் குறிக்கோளாகும். இது குறித்து பல ஆண்டுகளாக நியூசிலாந்து அரசாங்கம் முயற்சித்து வருகிறது. சட்டவிரோத […]

இந்தியா

திருவண்ணாமலை ஆலயத்தில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு! தீவிர சோதனையில் அதிகாரிகள்

  • November 6, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை பகுதியில் உள்ள பழமையான ஆலயத்தில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்தபோது, ஒரு மண்பானையில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக NDTV ஊடகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், மூன்றாம் ராஜராஜ சோழன் வாழ்ந்த 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் கோயிலில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்தன. இதன்போது, ஒரு மண்பானையில் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. மண்பானையில் இருந்த நாணயங்களைக் கண்ட ஆலய நிர்வாகம், உடனடியாக […]

உலகம் செய்தி

சீனாவில் 30 வருடங்களான முன்னாள் காதலியை தேடும் காதலன்! கடனை கொடுக்க திண்டாட்டம்

  • November 6, 2025
  • 0 Comments

சீனாவில் லீ (Li) என்ற நபர் ஒருவர் தனது முன்னாள் காதலியிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்காக அவரை தேடி வருகிறார். கடனை கொடுத்த முன்னாள் காதலியான மாவை (Ma), அவரது முன்னாள் காதலன் லீ (Li) என்பவர் தேடி வருவதாக South China Morning Post நிறுவனம் தெரிவித்துள்ளது. 1991ஆம் ஆண்டு இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய போது, காதல் உறவு ஏற்பட்டுள்ளது. சுமார் 8 வருடங்கள் நீடித்த அவர்களின் காதல் உறவு, குடும்ப சூழ்நிலை […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் தங்க நாணயத்திற்கு காத்திருந்த பெண் – பொதியில் கிடைத்த பழைய வெள்ளரிக்காய்

  • November 6, 2025
  • 0 Comments

ஜெர்மனியின் பவேரியா (Bavaria) மாநிலத்தின் பிர்க்லாண்டைச் சேர்ந்த ஒரு பெண், இணைய மோசடியில் 3,300 யூரோக்களை இழந்துள்ளார். குறித்த பெண், ஒரு வலைத்தளத்தில் விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தங்க நாணயத்தை வாங்க முயற்சித்தபோது, இறுதியில் ஒரு பழைய வெள்ளரிக்காயையே பெற்றுள்ளார். மோசடியைத் தவிர்க்க, விநியோகத்தின் பின்னர் பணம் செலுத்தும் முறையை அவர் தேர்வு செய்தார். மேலும், பணம் செலுத்துவதற்கு முன்பு பொதியைச் சரிபார்க்கவும் அவர் திட்டமிட்டிருந்தார். எனினும், பொதி வந்தபோது, அந்தப் பெண் வீட்டில் இருக்கவில்லை. அவரது தந்தை […]

error: Content is protected !!