அரசியல் இலங்கை

இராணுவம் போதைப்பொருள் கடத்தல்: ஆதாரம் கோருகிறது பாதுகாப்பு அமைச்சு! 

  • November 12, 2025
  • 0 Comments

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்துடன் பாதுகாப்பு தரப்பினருக்கு தொடர்புள்ளது என தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர மேற்படி குற்றச்சாட்டை நிராகரித்தார். “ இராணுவம் மற்றும் பொலிஸார் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என கேஜந்திரகுமார் பொம்மன்பலம் எம்.பி. குறிப்பிட்டார். இவ்வாறு நடக்கின்றதெனில் இடங்களின் பெயர், […]

இலங்கை

அரச வாகனம் வேண்டும்: சாமர எம்.பி. அடம்பிடிப்பு!

  • November 12, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தால் வாகனம் வழங்கப்படுமானால் அதனை நிராகரிக்கப்போவதில்லை – என்று சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி. தெரிவித்தார். “ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குமாறு நான் கோரவில்லை. மாறாக பாதுகாப்பு வழங்குமாறே வேண்டுகோள் விடுத்துள்ளேன். அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனினும், வாகனம் வழங்கப்பட்டால் அதனை நிராகரிக்கமாட்டேன். ஏனெனில் பதுளையில் இருந்து கொழும்பு வருவதற்கு வாகனம் அவசியம்.” எனவும் சாமர சம்பத் எம்.பி. குறிப்பிட்டார். அதேவேளை, எதிரணி உறுப்பினருக்குரிய கடமையை நான் சரிவர நிறைவேற்றி வருகின்றேன். […]

இலங்கை

பாதீடு தொடர்பில் நவம்பர் 14 இல் முதல் பலப்பரீட்சை! 

  • November 12, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை தேசிய மக்கள் சக்தி நாளை மறுதினம் 14 ஆம் திகதி எதிர்கொள்கின்றது. 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 7 ஆம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார். 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் 8 ஆம் […]

உலகம் செய்தி

கரீபியன் கடற்பகுதிக்கு கொண்டுவரப்பட்ட அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர் கப்பல்!

  • November 12, 2025
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டை (USS Gerald R Ford)  மையமாகக் கொண்ட ஒரு அமெரிக்க கடற்படை தாக்குதல் கப்பல் கரீபியன் கடற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக  அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கப்பலில் 4,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் மற்றும் டஜன் கணக்கான விமானங்கள் உள்ளன. தாக்குதல் படையில் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான்கள் மற்றும் பல்வேறு கப்பல்களும் இதில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் போதைப்பொருள் கொண்டு செல்லும் கப்பல்களைத் […]

உலகம் செய்தி

பயங்கரவாதத்தால் மீள் தன்மை கொண்ட நாடுகளின் மனப்பான்மையை உடைக்க முடியாது!

  • November 12, 2025
  • 0 Comments

டெல்லியின் சின்னமான செங்கோட்டை அருகே நடந்த துயர குண்டுவெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு   இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் நகரங்களை குறிவைத்தாலும், அது மீள்தன்மை கொண்ட நாடுகளின் மனப்பான்மையை ஒருபோதும் உடைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த நேரத்தில் இஸ்ரேல் துக்கத்திலும் வலிமையிலும் உங்களுடன் உறுதியாக நிற்கிறது,” என்று கூறியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.  அத்துடன் […]

உலகம்

தென்மேற்கு சைப்ரஸில் (Cyprus) உள்ள கடலோர நகரத்தில் நிலநடுக்கம்!

  • November 12, 2025
  • 0 Comments

தென்மேற்கு சைப்ரஸில் (Cyprus) உள்ள கடலோர நகரமான பாஃபோஸிலிருந்து (Paphos) வடகிழக்கே சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 09:31 மணிக்கு (12 மணி) ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக நிலடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மையம் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருப்பதாகவும் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்களும் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலடுக்கத்தை தொடர்ந்து […]

பொழுதுபோக்கு

“காஞ்சனா – 4” பட அப்டேட்டுக்காக காத்திருந்தவரா நீங்கள்? இதோ உங்களுக்காக…

  • November 12, 2025
  • 0 Comments

ஒரு படத்தின் 2 ஆவது பார்ட் எடுப்பதே ஒரு சவாலான விடயம் தான். ஆனால் நம்ம தமிழ் ஹீரோ ஒரு படத்தின் 4ஆவது பார்ட் வரை எடுக்கும் பெறுமையை பெறப்போகின்றார். இதுவரை 3 பார்ட்களை வெற்றிகரமாக எடுத்துவிட்டார். இப்போது 4ஆவது பார்ட் பற்றி தான் செய்தி வந்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை. நடன மாஸ்டராக, இயக்குனராக, கோரியோ கிராபராக, ரஜினியின் தீவிர ரசிகராக அனைவருக்கும் பரீட்சயமான ராகவா லாரன்ஸ் தான். இந்த படமும் அனைவருக்கும் குறிப்பாக […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் திறமையான தொழிலாளர்கள் இல்லை – ட்ரம்ப்!

  • November 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய திறமையான தொழிலாளர்கள் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சிஎன்.என் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பிரத்தியேக செய்தி சேவைக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. H1-B விசாக்கள் அமெரிக்க தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்குமா என செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த ட்ரம்ப், நீங்கள் திறமையான தொழிலாளர்களை கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலளித்த செய்தியாளர் இங்கே […]

செய்தி

ரஷ்யாவில் போர் எதிர்ப்பு பாடலை பாடிய இளம் பாடகிக்கு நேர்ந்த துயரம்!

  • November 12, 2025
  • 0 Comments

போர் எதிர்ப்பு பாடலை பாடிய இளம் பாடகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நீட்டித்து ரஷ்ய நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. லோகினோவா (Loginova) என்ற பிரபல பாடகி, அக்டோபர் மாதம் தனது நிகழ்ச்சியின் மூலம் போர் எதிர்ப்பு பாடலை  பாடியிருந்தார். இந்நிலையில்  பொது ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்போது அவரை 13 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குறித்த 13 நாட்கள் […]

இலங்கை செய்தி

எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம்

  • November 12, 2025
  • 0 Comments

“நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு நடைபெறுகின்றது. இதன்மூலம் இன ஒற்றுமை, மத ஒற்றுமை மேம்படுத்தப்பட்டு சமத்துவம் கட்டியெழுப்படும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், அரசியல் மாபியாக்களிடமிருந்து விடுபட்ட யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு […]

error: Content is protected !!