அரசியல் இலங்கை

மாகாணசபைத் தேர்தல்: சஜித் அணி எடுத்துள்ள முடிவு!

  • November 13, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவக்குழு கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றிரவு கூடியது. இதன்போது வரவு- செலவுத் திட்டம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. அவ்வேளையிலேயே அடுத்த வருடம் ஆரம்பத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் சமரை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழ் […]

அரசியல் இலங்கை

நவம்பர் 21 ஆட்சி கவிழ்ப்பு போராட்டம்?

  • November 13, 2025
  • 0 Comments

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சி கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது 21 ஆம் திகதி நடைபெறவுள்ள எதிரணியின் பேரணி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ நவம்பர் 21 ஆம் திகதி பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்;. இது ஆட்சி கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம். ஏனெனில் அடுத்த […]

பொழுதுபோக்கு

ரஜினிகாந்த்-கமல்ஹாசன் படத்திலிருந்து சுந்தர் சி வெளியேறினார்! ரசிகர்கள் அதிர்ச்சி

  • November 13, 2025
  • 0 Comments

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் சுந்தர் சி ஆகியோரின் கூட்டணியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் யார் கண் பட்டதோ… சுந்தர் சி ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு ரசிகர்களையும் நெட்டிசன்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுந்தர் சி தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கடிதம் மூலம் […]

உலகம் செய்தி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான பொருட்களுக்கு நிலையான கட்டணம் விதிக்க முன்மொழிவு!

  • November 13, 2025
  • 0 Comments

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறைந்த மதிப்புள்ள ஆர்டர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் கட்டணம் விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது. இன்று இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நுகர்வோருக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் 150 யூரோவிற்கு குறைந்த விலையுள்ள  பொருட்களுக்கு  வரி விதிக்கப்படாது. அதற்கு பதிலாக நிலையான கட்டணங்கள் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் ,   சிறிய பொட்டலங்களுக்கு இரண்டு […]

பொழுதுபோக்கு

லோகா படத்தில் மம்மூட்டி நடிப்பது உறுதியானது

  • November 13, 2025
  • 0 Comments

துல்கர் சல்மான் தயாரிப்பில் டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷினி நடிப்பில் வெளியான படம் ‘லோகா சாப்டர் 1’. சூப்பர் ஹீரோ கதையில், மலையாளத்தில் உருவான இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் வரும்காலத்தில் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், லோகா படத்தின் ஏதாவது […]

இலங்கை

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்வே பேரணி – நாமல்!

  • November 13, 2025
  • 0 Comments

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பல எதிர்க்கட்சிகள் ஏற்கனவே இந்த விவாதங்களில் இணைந்துள்ளன. கடந்த காலங்களில், பொதுஜன பெரமுனவிற்குள் மட்டுமே கலந்துரையாடல்கள் […]

உலகம் செய்தி

தென்கொரியாவில் பாதசாரிகள் மீது மோதிய லொறி – 02 பேர் பலி!

  • November 13, 2025
  • 0 Comments

தென் கொரியாவின் புச்சியோன் (Bucheon) நகரில் உள்ள சந்தை தொகுதியில் லொறியொன்று பாதசாரிகள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதனால் 18 பேர் காயமடைந்துள்ளதாக  தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் 60 வயதுடைய அடையாளம் தெரியாத லொறி ஒட்டுநர் ஒருவரை கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தனது வாகனம் பழுதடைந்ததாகவும், பாதுகாப்பு கேமரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் ஓட்டுநர் […]

பொழுதுபோக்கு

பெண்களின் உடல் குறித்து தமன்னா கூறிய அந்த தகவல்…

  • November 13, 2025
  • 0 Comments

மில்க் பியூட்டி தமன்னாவை சுற்றி தற்போது பல சர்ச்சைகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் அவர் இளமையாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பதற்கு ஒரு புதிய காரணத்தை கண்டுபிடித்து கூறுகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி என பெரும்பாலான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். அதே போல் ஒரு சில காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். எல்லாம் முடிய கடந்த 2 […]

உலகம்

அமெரிக்காவில் ஒரு வழியாக முடிவுக்கு வந்த அரச முடக்கம்!

  • November 13, 2025
  • 0 Comments

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செலவீன சட்டமூலத்திற்கு காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதிநிதிகள் சபையில் 222 வாக்குகளை பெற்ற குறித்த சட்டமூலம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கையெழுத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள நிலையில், அரசாங்க முடக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைய அமெரிக்க நிர்வாகம் அரசாங்க செலவின சட்டமூலத்தை சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு காங்கிரஸிடம் ஒப்புதலுக்காக சமர்ப்பித்தது, ஆனால் ஜனநாயகக் கட்சி தலைமையிலான […]

பொழுதுபோக்கு

ஜி.வி இசையில் பாடிய யுவன்… எந்த படத்தில் தெரியுமா?

  • November 13, 2025
  • 0 Comments

ஒரு இயக்குனரின் படத்தில் இன்னொரு இயக்குனர் நடிப்பது சாதாரணம் தான், அதேபோல் ஒரு இசையமைப்பாளரின் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பாடுவதும் இன்று சாதாரணமாகி விட்டது. அந்த வகையில், “பராசக்தி” திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா புதிய பாடல் ஒன்றை பாடியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் – இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோரின் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பராசக்தி”. கடந்த 1960-களில் அப்போதைய மெட்ராஸ் […]

error: Content is protected !!