உலகம் செய்தி

காசா பகுதியில் இருந்து ஹமாஸ் வெளியேற வேண்டும் – இஸ்ரேல் வலியுறுத்தல்!

  • November 18, 2025
  • 0 Comments

பாலஸ்தீன போராளிக் குழுவிற்கு பொது மன்னிப்பு வழங்கும் ட்ரம்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரித்துள்ள நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஹமாஸ் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என இன்று தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் நெதன்யாகு வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலிய அரசாங்கம் இந்த திட்டம் அமைதி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் நமது அண்டை நாடுகள் அனைத்திற்கும் அமைதி மற்றும் செழிப்புக்காக தனது கையை நீட்டுகிறது […]

இலங்கை

தங்காலே பகுதியில் துப்பாக்கிச்சூடு – தம்பதியினர் உயிரிழப்பு!

  • November 18, 2025
  • 0 Comments

தங்காலே பகுதியில் இன்று (18) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தங்காலே , உனகுருவ பகுதியில் உள்ள கபுஹேன சந்தி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்கள் முறையே 68 , 59 வயதுடையவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா

துருக்கியில் உயிரிழந்த ஜேர்மன் குடும்பம் – விசாரணையில் வெளியான திருப்பம், 16 பேர் கைது!

  • November 18, 2025
  • 0 Comments

துருக்கியில் உயிரிழந்த ஜெர்மனிய குடும்பத்தின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனியில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக தம்பதியர் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் துருக்கிக்கு விஜயம் செய்திருந்தனர். அப்போது  ஓர்டகோய் (Ortakoy) தெருக்கடையில் இருந்து சில உணவுகளை சாப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கடுமையாக நோய்வாய்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை இரு குழந்தைகள் உயிரிழந்தனர். மறுநாள் தாயார் உயிரிழந்தார். பல நாட்களாக தீவிர சிகிச்சையில் […]

ஐரோப்பா

உலகம் முழுவதிலும் இணைய செயலிழப்பை சந்தித்த ஆயிரக்கணக்கான மக்கள்!

  • November 18, 2025
  • 0 Comments

உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இணைய செயலிழப்பை சந்தித்தாக இன்று முறைப்பாடு அளித்துள்ளனர். குறிப்பாக PayPal, ChatGPT, Letterboxd மற்றும் bet365 உள்ளிட்ட தளங்களில் சிக்கல்களை சந்தித்தாக தெரிவித்துள்ளனர். உலகின் மிகவும் பிரபலமான வீடியோ கேம்களில் ஒன்றான லீக் ஆஃப் லெஜண்ட்ஸும் (League of Legends)  இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுட்டேஜ் டிராக்கர் டவுன்டெக்டரின் ( outage tracker Downdetector) கூற்றுப்படி காலை 11.40 மணியில் இருந்து 11,000 க்கும் மேற்பட்டோர் சிக்கல்களை முறைப்பாடு அளித்தாக […]

இலங்கை

திருகோணமலை சம்பவம்: ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு!

  • November 18, 2025
  • 0 Comments

திருகோணமலை சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிக்கை கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார். “ தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல் நடந்தால் அதற்கு எதிராக போராடலாம், ஜனநாயக மீறல்கள் இடம்பெற்றால் அதற்கு எதிராக போராட்டம் நடத்தலாம். பொருளாதாரம் சரிந்தால் அதற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை. […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவிற்கு இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!

  • November 18, 2025
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 20% குறைவடைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் (ONS) திருத்தப்பட்ட தரவுகள் தெரிவித்துள்ளன. நாட்டிற்குள் நுழைபவர்களுக்கும் வெளியேறுபவர்களுக்கும் இடையிலான வித்தியாசம், 86,000 பேரால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு (2024) 345,000 ஆக பதிவாகியதாக குறிப்பிடப்படுகிறது. புகலிட அமைப்பை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டங்களை அரசாங்கம் அறிவித்த பிறகு இந்த புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புகலிட நிலை மற்றும் புலம்பெயர்ந்தோரின் சலுகைகளைப் பெறுவதற்கான உரிமைகளின் […]

ஐரோப்பா

போலந்தின் ரயில் பாதை தகர்ப்பு – ரஷ்யா மீது குற்றச்சாட்டு!

  • November 18, 2025
  • 0 Comments

போலந்தில்  ரயில் பாதையை வெடிக்கச் செய்ய ரஷ்ய ரகசிய சேவைகள் உத்தரவிட்டதாக சில ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை போலந்தின் பாதுகாப்பு சேவைகள் அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் ஜேசெக் டோப்ர்சின்ஸ்கி (Jacek Dobrzyński)  இன்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போலந்தின்  கிழக்கு பகுதியில் உள்ள ரயில்வே மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை சரிபார்க்க இராணுவ ரோந்துப் படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே போலந்தின் […]

பொழுதுபோக்கு

லேடி சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் ஸ்பெஷல்…!

  • November 18, 2025
  • 0 Comments

பாலய்யா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள். இவருடைய நடனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறிதளவேனும் லாஜிக் இருக்காது. ஆனால் இதை பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் கூடுவார்கள். இந்த நிலையில், நடிகர் பாலய்யாவின் 111 ஆவது திரைப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். வரலாற்று கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, நடிகர் பாலய்யாவின் 111 ஆவது படத்தில் பிரபல நடிகை […]

இலங்கை

போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி!

  • November 18, 2025
  • 0 Comments

போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். “அடுத்த ஆண்டு நடுப்பகுதியில், இந்த அமைப்பை GovPay மூலம் ஓட்டுநர் குறைபாடு திட்டத்துடன் இணைக்கவும், வாகன ஓட்டிகளுக்கு ஒரு விரிவான குறைபாடு அமைப்பை அறிமுகப்படுத்தவும் நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்,” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை

திருமலை சம்பவத்தை வைத்து அரசியல் நடத்த இடமளியோம்!

  • November 18, 2025
  • 0 Comments

திருகோணமலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு அரசியல் லாபம் தேடுவதற்கு சில குழுக்கள் முற்படலாம். அவ்வாறான சம்பவங்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,  “ சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்குரிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. அதற்கமைய அவர்கள் செயற்படுவார்கள். எமது நாட்டில் புத்தர் சிலைக்கு சேதம் […]

error: Content is protected !!