உலகம் செய்தி

அயர்லாந்து நிதியமைச்சர் பதவி விலகல்

  • November 18, 2025
  • 0 Comments

உலக வங்கியின்(World Bank) மூத்த பொறுப்பை ஏற்பதற்காக, அயர்லாந்து(Ireland) நிதியமைச்சர் மற்றும் யூரோகுழுமத்(Eurogroup) தலைவர் பதவியை பாஸ்கல் டோனோஹோ(Paschal Donohoe) ராஜினாமா செய்துள்ளார். ஐரிஷ் அரசியலில் இருந்து டோனோஹோ வெளியேறியதால், கூட்டணி அரசாங்கம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில், பாஸ்கல் டோனோஹே நவம்பர் 24ம் திகதி நிர்வாக இயக்குநராகவும்(Managing Director) தலைமை அறிவு அதிகாரியாகவும்(Chief Knowledge Officer) பதவியேற்பார் என்று உலக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அரசாங்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடனான உலக வங்கியின் […]

இந்தியா செய்தி

மகனை இஸ்லாமிய அரசில் சேர வற்புறுத்திய தாய் மற்றும் மாற்றாந்தந்தை மீது வழக்கு பதிவு

  • November 18, 2025
  • 0 Comments

திருவனந்தபுரத்தைச்(Thiruvananthapuram) சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனை அவனது தாய் மற்றும் மாற்றாந்தந்தை இஸ்லாமிய அரசில்(ISIS) சேர வற்புறுத்திய குற்றச்சாட்டில் அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் அல்லது UAPAன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் குடும்பத்தினர் வற்புறுத்தியதை அதிகாரிகளுக்குத் தெரிவித்ததை அடுத்து, வெஞ்சாரமூடு(Venjaramoodu) காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்தனம்திட்டாவைச்(Pathanamthitta) சேர்ந்த பெண் இஸ்லாத்திற்கு மாறி வெம்பாயத்தைச்(Vempayam) சேர்ந்த ஒருவரை மறுமணம் செய்து கொண்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த […]

உலகம் செய்தி

இரண்டு ஆண்டுகளில் 94 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழப்பு – மனித உரிமைகள் குழு

  • November 18, 2025
  • 0 Comments

2023ம் ஆண்டு அக்டோபரில் காசா போரில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 98 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழந்துள்ளனர் என்று இஸ்ரேலிய மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் குழு வெளியிட்ட இந்த அறிக்கை, அதிகாரப்பூர்வ பதில்கள், மருத்துவ ஆவணங்கள், பிரேத பரிசோதனை அறிக்கைகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட கைதிகளின் சாட்சியங்கள் மற்றும் பிற மனித உரிமை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளின் மரணத்திற்கான […]

பொழுதுபோக்கு

வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட ராஜமௌலி ! பொலிஸில் முறைப்பாடு

  • November 18, 2025
  • 0 Comments

மகேஷ் பாபுவின் 25வது படமான வாரணாசி படத்தை டோலிவூட்டின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கி வருகிறார். படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிருத்விராஜ் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் 2027 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் அறிமுக டீசர் அண்மையில் ஐதராபாத்தில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் பேசிய ராஜமௌலி, “எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா கூறுவார் “அனுமன் நமக்கு பின்னால் இருந்து […]

பொழுதுபோக்கு

தமிழ் சினிமா தவற விட்ட தங்கம்… பாலிவூட்டில் கலக்கும் நம்ம “சாரா”

  • November 18, 2025
  • 0 Comments

பாலிவூட்டில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘துரந்தர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் ரன்வீர் சிங் மற்றும் அவரது இணை நட்சத்திரமான சாரா அர்ஜுன் இடையே ஒரு சிறிய காதல் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த சாரா அர்ஜூன் யார் என்று தெரியுமா மக்களே…. நம்ம தமிழ் குட்டி பொண்ணுதான். தெய்வதிருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த குட்டி பொண்ணுதான். ஆனால் இப்ப சாரா குட்டி பொண்ணு […]

பொழுதுபோக்கு

நண்பேன்டா… காரை பரிசாக கொடுத்த பிரதீப் ரங்கநாதன்

  • November 18, 2025
  • 0 Comments

தனது நண்பரும், இணை இயக்குநருமான ரமேஷ் நாராயணசாமிக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். ‘கோமாளி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் நடிகனாக ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் அனைத்து படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலித்து ஹெட்ரிக் சாதனையை படைத்தார். இந்த நிலையில், அவருடைய திரைப்படங்களில் சிறு வேடங்களிலும், இணை இயக்குநராகவும் பணியாற்றிய ரமேஷ் நாராயணசாமிக்கு நேற்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் கார் ஒன்றை […]

இந்தியா செய்தி

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 62 வயது நபர் கைது

  • November 18, 2025
  • 0 Comments

பெங்களூரு(Bangalore) மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியதற்காக 62 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ், டிப்ளோமா பட்டதாரி மற்றும் பெல்தூர்(Beldur) பகுதியில் உள்ளவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் (NIMHANS) சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவம்பர் 13ம் திகதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் இந்த […]

உலகம் செய்தி

நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தை விமர்சித்த பெண் மருத்துவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • November 18, 2025
  • 0 Comments

நிக்கோலஸ் மதுரோவின்(Nicolas Maduro) அரசாங்கத்தை வாட்ஸ்அப்(WhatsApp) பதிவில் விமர்சித்ததற்காக வெனிசுலா(Venezuela) நீதிமன்றம் ஒரு பெண் மருத்துவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 65 வயதான மார்கி ஓரோஸ்கோ(Margie Orozco) மீது தேசத்துரோகம், வெறுப்பைத் தூண்டுதல் மற்றும் சதி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. பொதுக் கருத்தைத் தூண்டியதற்காக வாட்ஸ்அப் பதிவு என்ன என்பதை நீதிமன்றம் வெளியிடவில்லை. 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு நகரமான சான் ஜுவான் டி கோலனில்(San Juan de Colón) மார்கி ஓரோஸ்கோ கைது […]

செய்தி விளையாட்டு

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் தொடரும் பேட் கம்மின்ஸ்

  • November 18, 2025
  • 0 Comments

2026ம் ஆண்டின் ஐ.பி.எல்(IPL) தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் 16ம் திகதி அபுதாபியில்(Abu Dhabi) நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தக்கவைத்துக்கொள்ளும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இதன்படி ஐ.பி.எல் தொடரில் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த ஐ.பி.எல் தொடரிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்(Sunrisers Hyderabad) அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

குரேஷியாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – தீயை கட்டுப்படுத்த பெரும் போராட்டம்!

  • November 18, 2025
  • 0 Comments

குரோஷிய (Croatian) தலைநகரான ஜாக்ரெப்பின் (Zagreb) நகர மையப் பகுதியில் அமைந்துள்ள வானளாவிய கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 16 மாடி கட்டிடத்தின் உச்சியில் தீ தொடங்கியதுடன் விரைவாக கீழ் தளங்களுக்கும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. சுமார் நூறு தீயணைப்பு வீரர்கள் இணைந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் இன்று காலை தீயை கட்டுக்குள் கொண்டுவந்தாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தீவிபத்தால் கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணத்தை அறிய காவல்துறையினர் […]

error: Content is protected !!