பா.ஜனதாவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ. அமலாக்கத்துறை செயல்படுகின்றன! உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
பா.ஜனதாவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை செயல்படுகின்றன என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகை தனியார் கல்லூரி மைதானத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்ததாவது, அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் […]













