சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கைக்கு எச்சரிக்கை
இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் சர்வதேச கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷீப் தெரிவித்துள்ளார். இத்தகைய கடுமையான சட்டங்கள் இருக்கும் வரை இலங்கை உண்மையான நல்லிணக்கத்தையோ அல்லது நிலையான சமாதானத்தையோ அடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே […]













