இலங்கை செய்தி

NDB வங்கி மோசடி -சர்வதேசத்தின் உதவியை கோர தீர்மானம்

  • April 13, 2026
  • 0 Comments

NDB வங்கியின் தரவு கட்டமைப்பிற்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபாவை பாரியளவில் மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக மெய்நிகர் பணம் தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸ் நிபுணர் குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரான்ஸின் லியோனில் உள்ள சர்வதேச பொலிஸ் தலைமையகத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட நால்வரும் […]

உலகம் செய்தி

அமைதி முயற்சி தொடர்கிறது: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

  • April 13, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் மோதல்களைத் தணிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது என பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் Shehbaz Sharif தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் (11) சனிக்கிழமை நடைபெற்ற இருதரப்புப் அமைதி பேச்சு எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இந்நிலையிலேயே மேற்படி கலந்துரையாடலுக்கு மத்தியஸ்தம் வகித்த பாகிஸ்தானின் பிரதமர், அமைதியை ஏற்படுத்துவதற்குரிய முயற்சி தொடர்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார். தீர்க்கப்படாத சிக்கல்களைச் சரிசெய்ய பாகிஸ்தான் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அமைச்சரவைக் கூட்டத்தில் […]

ஐரோப்பா செய்தி

பயோமெட்ரிக் சோதனையால் பெரும் அவலம்-பிரித்தானியாவுக்கு திரும்ப ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவு

  • April 13, 2026
  • 0 Comments

EasyJet விமானத்தில் பயணிக்க முயன்ற பலர், விமானத்தை தவறவிட்டதால் பிரித்தானியாவுக்கு திரும்ப ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இத்தாலியின் மிலான் லினேட் விமான நிலையத்தில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டர் நோக்கி புறப்பட இருந்த விமானத்தை 100 க்கும் மேற்பட்ட பயணிகள் தவறவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்திய புதிய நுழைவு–வெளியேறு முறை (Entry-Exit System – EES) காரணமாக எல்லை கட்டுப்பாட்டு சோதனைகளில் கடும் தாமதம் ஏற்பட்டதாக பயணிகள் கூறுகின்றனர். புதிய […]

உலகம் செய்தி

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கி சீனாவை இலக்கு வைக்கும் ட்ரம்ப்!

  • April 13, 2026
  • 0 Comments

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்குவதன் மூலம் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சீனா தனது எரிசக்தி தேவைகளுக்கு ஈரானை அதிகம் நம்பியுள்ளதால் இந்தத் தடையின் மூலம் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என அமெரிக்கா கருதுகின்றது. அவ்வாறு நடந்தால் ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு சீனா வற்புறுத்தும் என வாஷிங்டன் கருதுகின்றது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்ஓர் அங்கமாகவே ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் உள்ள ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடுவதற்காக பெரிய அளவிலான […]

ஐரோப்பா செய்தி

புயல் காற்று பாதிப்பு முடிந்தது – படகுப் பயணங்கள் மீண்டும் ஆரம்பம்

  • April 13, 2026
  • 0 Comments

வார இறுதியில் ஏற்பட்ட புயல் காற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஐல் ஆஃப் மேன் மற்றும் லங்காஷயர் (Isle of Man and Lancashire) இடையேயான படகுப் பயணங்கள் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. ஹெய்ஷாம் (Heysham)நோக்கி செல்லும் மாலை மற்றும் இரவு நேரப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேங்க்ஸ்மேன் (Manxman) கப்பல் இன்று காலை 8.30 க்கு டக்ளஸிலிருந்து (Douglas)புறப்பட்டது. இதேவேளை, வானிலை காரணமாக முன்பு வட அயர்லாந்து பயணத்துக்காக மாற்றியமைக்கப்பட்டிருந்த இந்தக் கப்பல், பின்னர் லார்ன் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர் விவகாரம்: டிரம்ப்– போப் லியோ இடையே கடும் வார்த்தை மோதல்

  • April 13, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் இடம்பெறும் போர் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் முதல் அமெரிக்க போப்பாண்டவர் Pope Leo XIV இருவரும் முற்றிலும் மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த 05 அன்று தனது முதல் ஈஸ்டர் ஆசி உரையில் போப் லியோ, போர்களைத் தொடங்கும் அதிகாரம் கொண்டவர்கள் அமைதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன்பின்னர் கடந்த 07 ஆம் திகதி ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் “முழு நாகரிகமும் அழியும்” என […]

இலங்கை செய்தி

சமூக வலைத்தளங்களில் பரவும் நிலக்கரி நிறுவன தலைவரின் குரல் பதிவு திரிபுபடுத்தப்பட்டது

  • April 13, 2026
  • 0 Comments

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிலக்கரி விநியோக நிறுவனத்தின் உள்ளூர் முகவர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவு, தவறான அர்த்தத்தில் திரிபுபடுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த தொலைபேசி உரையாடல் கடந்த 2026 மார்ச் 25 அன்று இடம்பெற்றுள்ளது. அவசர நிலக்கரி விநியோகத்திற்காக அமைச்சரவை அங்கீகாரத்துடன் முறையாக விலைமனு கோரல் வழங்கப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதியுடனேயே இந்த உரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியினால் வழங்கப்பட வேண்டிய ‘செயல்திறன் […]

செய்தி தமிழ்நாடு

தேர்தல் நேரத்தில் மகளிர் மீது ஆளும் கட்சி தாக்குதல் – விஜய் கண்டனம்

  • April 13, 2026
  • 0 Comments

மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, சகோதரி ஒருவரது வீட்டின் சுவரில் அவரது அனுமதியின்றித் தங்களது கட்சிக்கான ஸ்டிக்கர்களை காட்சிப்படுத்தியதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, மற்றுமொரு சகோதரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். மகளிர் மீதான இந்தத் […]

ஐரோப்பா செய்தி

சவுத்போர்ட் படுகொலை – விசாரணை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

  • April 13, 2026
  • 0 Comments

சவுத்போர்ட் படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சவுத்போர்ட் படுகொலை தொடர்பான விசாரணையில் முக்கியமான சில தகவல்களை விசாரணைத் தலைவர் சர் ஏட்ரியன் ஃபுல்ஃபோர்ட் (Sir Adrian Fulford) வெளியிட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர் எந்தவிதமான மனநோயாலும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என இதன்போது அறிவிக்கப்பட்டது. மேலும், அவர் தனது பெரும்பாலான நேரத்தை இணையத்தில் மிகவும் பொருத்தமற்ற மற்றும் மனதை பாதிக்கும் உள்ளடக்கங்களை பார்ப்பதில் செலவிட்டதாகவும், அந்த நேரத்தில் பெற்றோர் கண்காணிப்பு அல்லது கட்டுப்பாடுகள் இன்றி இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, சரியான […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் புதிய அணுமின் நிலையத் திட்டம் – 8,000 வேலைவாய்ப்புகள்

  • April 13, 2026
  • 0 Comments

அரசாங்கம் புதிய அணுமின் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 8,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Rolls-Royce (ரோல்ஸ் ராய்ஸ்) நிறுவனத்துடன் கடந்த ஆண்டு £2.5 பில்லியன் மதிப்பிலான கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, Wylfa பகுதியில் அணுமின் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வைல்ஃபா பகுதியில் 3,000 உள்ளூர் வேலைவாய்ப்புகளும், தேசிய அளவில் மேலும் 5,000 வேலைவாய்ப்புகளும் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுசக்தித் துறையை […]

error: Content is protected !!