ஆசியா

மெட்டா நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும் மலேசியா!

  • June 23, 2023
  • 0 Comments

ஃபேஸ்புகின் தாய் நிறுவனமான மெட்டா  மீது சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக மலேசியா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்கள், அதன் சமூக ஊடகத் தளத்தில்  தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அகற்றத் தவறியமைக்காக மேற்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவதூறு, ஆள்மாறாட்டம், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் மோசடி விளம்பரங்கள் தொடர்பான “கணிசமான அளவு விரும்பத்தகாத உள்ளடக்கங்கள் ஃபேஸ்புகில் இருப்பதாகவும், இதனால் இளையவர்கள் பாதிக்கப்படுவதாகவும் லேசிய தகவல் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை அகற்ற மெட்டாவைத் தொடர்புகொள்ள […]

இலங்கை

19வயது இளைஞனால் உக்ரேனிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • June 23, 2023
  • 0 Comments

ஹபராதுவ, பெய்ல கொட சைத்யலங்கார விகாரையில் வழிபாடு செய்யச் சென்ற உக்ரேனிய சுற்றுலாப் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞனை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உனவடுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள இந்த சுற்றுலாப் பெண், கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சுற்றுலாப் பெண் நேற்று முன்தினம் வழக்கம்போல் […]

பொழுதுபோக்கு

‘எஸ்கே22’ படத்தில் நடிக்கவிருக்கும் நடிகை இவரா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்கே21’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள ‘எஸ்கே21’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே22’ படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ‘எஸ்கே22’ […]

ஐரோப்பா

ஜேர்மனியில் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்!

  • June 23, 2023
  • 0 Comments

ஜேர்மனியில் இந்தவாரம் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் கணிசமான அளவு மழையுடன் கூடிய புயல்கள் நாட்டை தாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி நேற்று கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு நகரமான டியூஸ்பர்க்கில், வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் சிக்கிய கார்களில் இருந்து பலரை மீட்டதாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. வடக்கு நகரமான Braunschweig கிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், சில் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

இலங்கை

விமான ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை : ஆபத்தில் உள்ள பயணிகள் – சஜித் எச்சரிக்கை!

  • June 23, 2023
  • 0 Comments

நாட்டில் விமான ஓட்டுனர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக சேவையில் இருக்கும் விமான ஓட்டுனர்கள் சர்வதேச விதிமுறைகளை மீறி செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (23.06) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். கடந்த 6 மாதக் காலப்பகுதியில்,   ஸ்ரீலங்கன் எயார்லைன்சில் விமான ஓட்டுனர்கள் 70 பேர் நீங்கியுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்சில் தற்போது 260பேருக்கும் குறைவான விமான ஓட்டுனர்களே இருக்கின்றனர். இந்த வருடத்தில் மேலும் 18பேர் செல்ல […]

உலகம்

விமானத்தை கடத்த முயற்சியா? கடைசியில் நடந்தது என்ன

விமானத்தை கடத்துவது குறித்து தொலைபேசியில் பேசியதாக விமானப் பயணியான இளைஞன்ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் யுகே 996 இல் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது. விமானம் புறப்படுவதற்கு முன், தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த இளைஞன், ‘ஹைஜாக்’ என சத்தம் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதுடன், விமானமும் சோதனையிடப்பட்டது. அதன் விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. […]

இலங்கை

தேசபந்து தென்னகோனின் ரிட் மனுமீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

  • June 23, 2023
  • 0 Comments

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு ஜீன் 26 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம்  கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ‘அறகலய’ எதிர்ப்பாளர்களால் கண்டெடுக்கப்பட்ட பெருந்தொகை பணம் குறித்து தேசப்பந்து தென்னகோனுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனுவை நிராகரிக்க உத்தரவிடுமாறு கோரி தேசப்பந்து தென்னகோன் ரிட் மனுவொன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த ரிட் மனுமீதான […]

இலங்கை

எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு விடுமுறை

  • June 23, 2023
  • 0 Comments

எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த விசேட விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் அரசியலமைப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று (ஜூன் 23) கடமைகளை பொறுப்பேற்றார். மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் மின்சாரம் தடைப்பட்ட காலம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் நீண்ட காலமாக ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து மே மாதம் ஜனக ரத்நாயக்க பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து புதிய PUCSL தலைவர் நியமிக்கப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள், மே 24 அன்று, […]

பொழுதுபோக்கு

“விஜய் மாமா.. சிகரெட் எல்லாம் குடிக்க கூடாது.. தப்பு” விஜய்க்கு இது போதுமா?

  • June 23, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று விஜய் தனது 49ஆவது பிறந்ததினத்தை கொண்டாடியிருந்தார். இதை முன்னிட்டு லிளோ படக்குழு பல சர்ப்பிரைஸ்களை அள்ளி வீசியது. அதிலும் நா ரெடி பாடல் மிக வைரலாகியதுடன், விஜயின் நடனம் பலரையும் வியக்கவைத்தது. எனினும் குறித்த காட்சியில் விஜய் வாயில் சிகரட்டுடன் இருப்பது மைனஸாகவே பார்க்கப்படுகின்றது. இதையடுத்து பலரும், அரசியல் ஆசை கொண்ட விஜய் சமூக அக்கறையுடன் […]

error: Content is protected !!