இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் அரசியலமைப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று (ஜூன் 23) கடமைகளை பொறுப்பேற்றார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் மின்சாரம் தடைப்பட்ட காலம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் நீண்ட காலமாக ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து மே மாதம் ஜனக ரத்நாயக்க பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து புதிய PUCSL தலைவர் நியமிக்கப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், மே 24 அன்று, ரத்நாயக்கவை PUCSL தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரும் பிரேரணையை 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 30 times, 1 visits today)