தாய்லாந்தில் தகனம் செய்யும் இறுதி நேரத்தில் சவப்பெட்டியில் இருந்து கேட்ட சத்தம்!
தாய்லாந்தின் பாங்காக்கின் (Bangkok) புறநகர்ப் பகுதியில் புத்த கோவிலில் தகனம் செய்யப்படவிருந்த பெண் ஒருவர் இறுதி நேரத்தில் உயிருடன் இருப்பதை கண்டு அதிகாரிகள் வியந்துபோயுள்ளனர். கோவிலின் பொது மேலாளர் பைரத் சூத்தூப் (Pairat Soodthoop) சவப்பெட்டியில் இருந்து லேசான தட்டும் சத்தத்தை கேட்டப்பின்னர் திகைத்துப்போனதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சவப் பெட்டியை திறந்தப்பின்னர் குறித்த பெண் பக்கவாட்டில் படுத்திருந்ததாகவும், நீண்ட நேரமாக அவர் சவப் பெட்டியை தட்டியிருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். […]













