இலங்கை செய்தி

கொழும்பு-பதுளை ரயில் பயணங்களில் மாற்றம்

  • November 26, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, கொழும்பு கோட்டைக்கும்(Colombo Fort) பதுளைக்கும்(Badulla) இடையிலான அனைத்து மலையக ரயில் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நானுஓயா(Nanu Oya) ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. நிலவும் பாதகமான வானிலை காரணமாக மலையக ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்ட இரவு அஞ்சல் ரயில் நானுஓயா நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், பதுளையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் இரவு […]

உலகம் செய்தி

பிட் புல்(pit bull) நாய்களால் கொல்லப்பட்ட 23 வயது அமெரிக்க மாணவி

  • November 26, 2025
  • 0 Comments

டெக்சாஸ்(Texas) பல்கலைக்கழகத்தின் மாணவியான 23 வயது மேடிசன் ரிலே ஹல்(Madison Riley Hull), டெக்சாஸின் டைலரில்(Tyler) உள்ள அவரது வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட மூன்று பிட் புல்(pit bull) நாய்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். நவம்பர் 21 அன்று அவசர சேவைகளுக்கு அழைப்பு வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டில் மேடிசன் ரிலே ஹல் இறந்து கிடந்ததை கண்டுள்ளனர். பின்னர் பிட் புல்களில் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது, மற்ற இரண்டு நாய்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளது. “மேடிசன் […]

உலகம் செய்தி

திருப்பதி கோயிலுக்கு 9 கோடி நன்கொடை அளித்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர்

  • November 26, 2025
  • 0 Comments

அமெரிக்காவைச்(America) சேர்ந்த இந்தியர் ஒருவர் திருப்பதி(Tirupati) தேவஸ்தானத்திற்கு ரூ.9 கோடி நன்கொடை அளித்ததாக கோயில் அமைப்பின் தலைவர் பி.ஆர். நாயுடு(PR.Naidu) தெரிவித்துள்ளார். “திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டிடங்களின் புதுப்பிப்புக்காக எம். ராமலிங்க ராஜு ரூ.9 கோடி நன்கொடை அளித்தார்” என்று பி.ஆர். நாயுடு X பதிவில் குறிப்பிட்டுள்ளார். ராமலிங்க ராஜு நன்கொடை வழங்குவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக 2012ல் 16 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாக நாயுடு தெரிவித்துள்ளார். பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதில் பங்களித்ததற்காக […]

செய்தி விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா

  • November 26, 2025
  • 0 Comments

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்தவகையில், முதலில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தென் ஆப்பிரிக்கா அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து, கவுகாத்தியில்(Guwahati) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா அணி சகல […]

பொழுதுபோக்கு

ஜெயிலர் – 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி?

  • November 26, 2025
  • 0 Comments

இயக்குநர் நெல்சன் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகின்றது. இந்தபாகத்திலும், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜெயிலர் – 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், கோவாவில் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

UK வரவு செலவு திட்டம் – இரண்டு குழந்தை சலுகை வரம்பு இரத்து!

  • November 26, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் இரண்டு குழந்தை சலுகை  வரம்பு (two-child benefits limit)  2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்ட பொறுப்பு அலுவலகம் (OBR) இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கை மாற்றம் 2029-30 ஆம் ஆண்டுக்குள் குழந்தை வறுமையை 450,000 ஆகக் குறைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சூதாட்ட வரிகளில் சீர்திருத்தங்கள், நலன்புரி அமைப்பில் மோசடிகளைத் தடுத்தல் மற்றும் வரி தவிர்ப்பை முறியடித்தல் மூலம் இந்த திட்டத்திற்கு முழுமையாக நிதியளிக்கப்படும் […]

பொழுதுபோக்கு

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டித்தூக்கிய இயக்குநர்…

  • November 26, 2025
  • 0 Comments

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த தலைவர் 173 திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. ஆனால் அப்படத்தில் இருந்து விலகுவதாக திடீரென அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து ரஜினி படத்தை இயக்க தனுஷ், ஆர்.ஜே.பாலாஜி, நிதிலன் சுவாமிநாதன் ஆகியோர் ரஜினியிடம் கதை சொன்னதாகவும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில், தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. இவர் இயக்கிய முதல் படமான பார்க்கிங் தேசிய விருதை வென்றிருந்தது. இதையடுத்து […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!

  • November 26, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில்  அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) இன்று தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அடுத்த ஆண்டு மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு 1500 பவுண்ட்ஸ் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர்களுக்கு ஊதியமானது 4.7% சதவீதம் அதிகரித்து ஒரு மணி நேரத்திற்கு £12.71 ஆக அதிகரிக்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது முழுநேர ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் £900 ஊக்கத்தை அளிக்கும் எனவும் […]

பொழுதுபோக்கு

ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு சம்பள பாக்கியா?

  • November 26, 2025
  • 0 Comments

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜனநாயகன் படம் குறித்து பல நாட்களாக ஒரு விடயம் கேள்வியை எழுப்பியிருந்தது. அதாவது, சம்பள நிலுவை காரணமாக விஜயின் டப்பிங் பணி தாமதமானதாக தகவல்கள் பரவி வந்தன. இதனை மறுத்துள்ள படக்குழு, இந்த தகவல்கள் ஆதாரமற்றவை. விஜய் படத்திற்கான டப்பிங் பணிகளை […]

உலகம்

ஹாங்காங் (Hong Kong) தீவிபத்து – பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

  • November 26, 2025
  • 0 Comments

ஹாங்காங்   தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ஹாங்காங்கின் (Hong Kong) வடக்கு தை போ (Tai Po) மாவட்டத்தில் உள்ள  உயரமான குடியிருப்பு வளாகத்தின் மூன்று தொகுதிகளில்  இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 31 மாடி கட்டிடத்தில் பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் பெரும்பாலான மக்கள் கட்டிடத்திற்குள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்க மீட்பு பணியாளர்கள் போராடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி […]

error: Content is protected !!