ஐரோப்பா செய்தி

பிரித்தானிய கொமன்ஸ் அவையில் பிரதமர் மற்றும் சபாநாயகர் இடையே வாக்குவாதம்

  • April 16, 2026
  • 0 Comments

பிரதமரின் கேள்வி நேரத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்கு பின்னர், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்ததாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. கொமன்ஸ் அவையில் அவர் தெளிவான மற்றும் சுருக்கமான பதில்களை வழங்கியதாகவும் பிரதமரின் அலுவலகம் கூறியுள்ளது. ஆனால், டோரி தலைவர் கெமி படேனொக் எழுப்பிய கேள்விகளை ஸ்டார்மர் புறக்கணித்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தினர். இதற்கு பதிலளித்த பிரதமரின் செய்தித் தொடர்பாளர், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் முழுமையான விளக்கங்களுடன் பதிலளித்ததாக தெரிவித்தார். இந்நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதல் – தெற்கு லெபனானை இணைத்த கடைசி பாலமும் அழிக்கப்பட்டது

  • April 16, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான கடைசி பாலம் இஸ்ரேலிய தாக்குதலில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டைர் (Tyre) பகுதியையும் சிடோன் (Sidon) நகரத்தையும் இணைக்கும் காஸ்மியே பாலம், அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு வான்வழித் தாக்குதல்களின் விளைவாக சேதமடைந்து பின்னர் முழுமையாக இடிந்து வீழ்ந்ததாக லெபனானின் அரசுக்கு சொந்தமான தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பாலம் தெற்கு லெபனானின் முக்கிய போக்குவரத்து இணைப்பாக இருந்ததால், அதன் அழிவு அந்தப் பகுதியில் உள்ள […]

ஐரோப்பா செய்தி

பாலியல் வன்கொடுமை சம்பவம்: இங்கிலாந்தில் போராட்டம், கலவரத்திற்கு எச்சரிக்கை

  • April 16, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் எப்சம் பகுதியில் ஒரு பெண் பல ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கலவரத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று சர்ரே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சனிக்கிழமை அதிகாலை, லாபிரிந்த் இரவு விடுதியிலிருந்து வெளியேறிய 20 வயது பெண் பின்தொடரப்பட்டு, எப்சம் மெதடிஸ்ட் தேவாலயத்திற்கு வெளியே தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் அடையாள விபரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் வீதிகளில் இறங்கினர். இதனால் புதன்கிழமை மாலை, […]

இலங்கை

திருகோணமலையில் சமாதான நீதவான்கள் சங்கக் கிளை அங்குரார்ப்பணம்!!

  • April 16, 2026
  • 0 Comments

திருகோணமலையில் சமாதான நீதவான்கள் சங்கக் கிளை அங்குரார்ப்பணக்கூட்டம் இன்று (16) திருகோணமலை உப்புவெளி கமநல சேவைகள் நிலையத்தின் மாநாட்டு மணடபத்தில் வைத்தியர் என்.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட சமாதான நீதவான்களது கடமைகள் பொறுப்புக்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பரப்பப்படுதல் வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதாகவும் எம்மால் முடிந்தவரை மக்களுக்கான சேவைகளை செய்வதற்கு அனைத்து அங்கத்தவர்களும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் எனவும் இதன்போது  வைத்தியர்  என். ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  திருகோணமலை மாவட்டத்தில் இயங்கும் […]

உலகம் செய்தி

இஸ்ரேல்–லெபனான் தலைவர்கள் இடையே இன்று பேச்சு நடக்குமா? குழப்பம் நீடிப்பு

  • April 16, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனுடன் கலந்துரையாடுவார் என இஸ்ரேலின் அமைச்சரவை பாதுகாப்பு உறுப்பினர் காலியா கம்லியல் தெரிவித்துள்ளார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு,  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், இஸ்ரேல் மற்றும் லெபனான் தலைவர்கள் நாளை பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என பதிவு செய்திருந்தார். ஆனால், வியாழக்கிழமை லெபனான் ஜனாதிபதி அலுவலகம் இந்த தகவலை மறுத்து, இத்தகைய பேச்சுவார்த்தைகள் குறித்து தங்களுக்கு தெரியாது என்று தெரக்ரவித்துள்ளது. […]

இந்தியா செய்தி

பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கவிடாது தடுப்பவர்களை காலம் மன்னிக்காது – மோடி

  • April 16, 2026
  • 0 Comments

பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கவிடாது தடுப்பவர்களை காலம் மன்னிக்காது – என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகளிர் இடஒதுக்கீடு திருத்த சட்டமூலம், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 சட்டமூலங்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றி போதே பிரதமர்   இவ்வாறு கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்திய நாடாளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் தேசத்தின் முக்கிய தருணத்தில் நானும் உள்ளேன் என்பதில் பெருமை. மக்கள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கும்? நிபுணர்களின் கணிப்பு!

  • April 16, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த பெப்ரவரி மாதம் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட  0.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சாதகமான வளர்ச்சி இருந்தபோதிலும், ஈரான் போரின் சாத்தியமான தாக்கம் மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் காரணமாக இந்த ஆண்டிற்கான   பொருளாதார வாய்ப்புகள் மந்தமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான பிரித்தானியாவன் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 1.3 சதவீதத்திலிருந்து கணிசமாகக் குறைத்து 0.8 சதவீதமாக மாற்றியுள்ளது.  இது […]

ஐரோப்பா செய்தி

போர் நீடித்தால்  உணவுப் பற்றாக்குறை அபாயம் ஏற்படும் – பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை

  • April 16, 2026
  • 0 Comments

ஈரானில் போர் நீடித்தால், பிரித்தானியாவில் கோடைக்காலத்திற்குள் சில உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அரசாங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மோசமான சூழ்நிலைக்கான முன்னெச்சரிக்கை திட்டங்களில், ஹார்முஸ் நீரிணை மூடப்படுவது மற்றும் கார்பன் டை ஆக்சைடு (CO2) விநியோகத்தில் இடையூறு ஏற்படுவது போன்ற சாத்தியங்கள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. CO2 என்பது , உணவு பதப்படுத்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. எவ்வாறாயினும்  தற்போதைக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இதேவேளை, டெஸ்கோ நிறுவனத் தலைவர் […]

உலகம்

வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை இராணுவ உபகரண உற்பத்திக்கு பயன்படுத்த ட்ரம்ப் திட்டம்!

  • April 16, 2026
  • 0 Comments

அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களின் தொழிற்சாலைகளை இராணுவ உபகரணங்கள் உற்பத்திக்கு பயன்படுத்துவது குறித்து விவாதிக்க, ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மற்றும் உக்ரைனில் தொடரும் மோதல்களால் இந்த முயற்சி தூண்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள், ஜிஇ ஏரோஸ்பேஸ் (GE Aerospace) மற்றும் ஓஷ்கோஷ் (Oshkosh) போன்ற நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஓஷ்கோஷ் (Oshkosh) நிறுவனம் நவம்பர் மாதம் முதல் பென்டகனுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது டெட்ராய்ட் வாகன உற்பத்தியாளர்கள் […]

இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

  • April 16, 2026
  • 0 Comments

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரி ஆராச்சி ஆயுதங்களுடன், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரீ – 56 ரக இரண்டு மெகசீன்கள், அதற்கான 221 தோட்டாக்கள் மற்றும் கைகுண்டு ஒன்றும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!