அதிபர் புடினால் நான் ‘ஏமாற்றமடைந்தேன், ஆனால் இன்னும் முடியவில்லை’ ; டிரம்ப்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினால் ஏமாற்றமடைந்துள்ளதாகச் சொன்ன அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், புட்டினுடனான விவகாரம் இன்னும் முடியவில்லை என்று கூறியுள்ளார். “புட்டினால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவருடனான விவகாரம் இன்னும் முடியவில்லை,” என்று டிரம்ப் கூறினார்.“புட்டினுடன் ஆக்ககரமான உரையாடல் நடைபெறும். அது நல்லது. போர் நிறுத்தத்தை எட்டுவதை நெருங்குகிறோம் என்று கூறிய பின் உக்ரேனில் அவர் ஒரு கட்டடத்தை இடித்துவிடுவார்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார். உக்ரேனுடனான போரைத் புட்டின் அடுத்த 50 நாள்களுக்குள் நிறுத்தாவிட்டால் […]













