லியோ வெற்றியால் 2 மடங்கு அதிகரித்த சம்பளம் : ஓபனாக சொன்ன லோகேஷ்
ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்திற்கு தான் வாங்கிய சம்பளம் என்னவென்பதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படுத்தியுள்ளார். ஜெயிலர் மற்றும் வேட்டையன் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதால் […]












