உளவு பார்த்ததற்காக ஜப்பானிய நபருக்கு 3 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதித்துள்ள சீன நீதிமன்றம்
சீனாவில் ஜப்பானியக் குடிமகன் ஒருவர் உளவு பார்த்ததாக மூன்றறை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய அரசாங்க அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டதாக நிப்பான் தொலைக்காட்சி தெரிவித்தது. தண்டனை விதிக்கப்பட்ட ஆடவர் சீனாவில் உள்ள ஜப்பானிய மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.அவர் ஓர் உளவாளியெனச் சீன அதிகாரிகள் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தனர். பின்னர் அதே ஆண்டு அக்டோபர் மாதம் அந்த ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட நபவரை விடுதலை […]












