இலங்கை

இலங்கையில் புதிய அரசியலமைப்பை நோக்கி நகரும் அரசாங்கம்

  • July 26, 2025
  • 0 Comments

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளத. அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

உலகம்

உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள கம்போடியா

  • July 26, 2025
  • 0 Comments

தாய்லாந்து-கம்போடிய எல்லையில் இரண்டு நாட்கள் சண்டைக்குப் பிறகு, கம்போடியா தாய்லாந்திலிருந்து உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கம்போடியாவின் ஐ.நா. தூதர், தனது நாடு “நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், சண்டைக்கு அமைதியான தீர்வு தேவை என்றும் கூறினார். போர்நிறுத்த திட்டம் குறித்து தாய்லாந்து இதுவரை எந்த பொதுக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. கம்போடியாவின் எல்லையை ஒட்டியுள்ள எட்டு மாவட்டங்களில் ஏற்கனவே இராணுவச் சட்டத்தை அறிவித்துள்ளது. இந்த சண்டையில் இரு நாடுகளிலும் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100,000 […]

அறிந்திருக்க வேண்டியவை

வட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாவில் கடுமையாகும் சட்டம்

  • July 26, 2025
  • 0 Comments

அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனம் சமூக ஊடக தளங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் மற்றும் வாட்ஸ்அப் அரசியல், தேர்தல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கான விளம்பரங்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பதிவிட தடை விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, தவறான தகவல்களின் பரவல் மற்றும் வெளிநாட்டு சக்திகளால் நடைபெறும் தேர்தல் குறுக்கீடுகளைத் தடுக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகும். மெட்டாவின் இந்த நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறது. குறிப்பாக, தேர்தல் நேரங்களில் தவறான தகவல்களை பரப்பும் […]

ஐரோப்பா

பிரித்தானிய பிரதமரின் இல்லத்திற்கு அருகே குவிந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள்

  • July 26, 2025
  • 0 Comments

பிரித்தானிய பிரதமரின் இல்லத்திற்கு அருகே நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காசாவில் உணவு பெற காத்திருந்த நிலையில் பலர் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாத்திரங்கள் மற்றும் வாத்தியங்களுடன் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், “பாலஸ்தீனத்தில் நடைபெறும் மனிதாபிமான பேரழிவுக்கு பிரித்தானிய அரசு மௌனமாக இருப்பதை ஏற்க முடியாது” எனக் கோஷமிட்டனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், உணவுக்காக நிவாரண முகாம்களுக்கு வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் […]

செய்தி

பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 80 லைட் அறிமுகம்!

  • July 26, 2025
  • 0 Comments

ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (Realme Narzo 80 Lite 4G) மாடலை இந்தியாவில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் வெளியான ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி மாடலின் 4ஜி பதிப்பாகும். விலையை மலிவாக வைத்திருக்க சில அம்சங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், இது 90Hz டிஸ்ப்ளே மற்றும் ஆக்டா-கோர் சிப்செட் போன்ற சிறப்பம்சங்களுடன், 128GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டது. குறிப்பாக, இந்த போன் 6,300mAh பெரிய பேட்டரியுடன் […]

வாழ்வியல்

மீண்டும் வழக்கில் சிக்கிய யஷ் தயால்! போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு!

  • July 26, 2025
  • 0 Comments

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயால் மீது, ராஜஸ்தானைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கிரிக்கெட் தொடர்பாக உதவுவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெய்ப்பூரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் சங்கனீர் சதர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த எஃப்.ஐ.ஆர்., யஷ் தயால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியை உணர்ச்சி ரீதியாக மிரட்டி, கிரிக்கெட் வாழ்க்கையில் உதவுவதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் […]

செய்தி

AIயால் ஏற்பட்டுள்ள ஆபத்து – வங்கிகளுக்கே பாதுகாப்பு இல்லை என சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை

  • July 26, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி குறித்து ஓபன் AI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏஐ வேகமாக வளர்ந்து வரும் சூழலில், இது தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஆபத்து அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார். அதில், போலி வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்களை மிகவும் உண்மையாக உருவாக்கும் திறனை ஏஐ பெற்றுவிட்டது என்றும், இது உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்த முடியாத நிலையை உருவாக்கும் என்றார். “யார் நம்மை அழைக்கிறார்கள், யாருடன் நாம் உரையாடுகிறோம் […]

இலங்கை செய்தி

இலங்கையின் இன்றைய வானிலை தொடர்பில் விசேட அறிவிப்பு

  • July 26, 2025
  • 0 Comments

இன்று மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் வடக்கு மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த […]

ஐரோப்பா

ஸ்பெயினிலிருந்து சென்ற விமானத்தில் சர்ச்சை – 52 பயணிகள் யூதர்கள் என்பதால் வெளியேற்றம்?

  • July 26, 2025
  • 0 Comments

ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரத்திலிருந்து பாரீஸிற்குப் புறப்பட இருந்த வூலிங் விமானத்தில் இருந்து, 44 குழந்தைகள் உட்பட 52 பயணிகள் வெளியேற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் அனைவரும் யூதர்கள் என்பதால், மத அடிப்படையிலான காரணத்தில் வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்தியொன்று வெளியாகிளது. இந்தப் பின்னணியில், சம்பவம் தொடர்பாக வூலிங் நிறுவனம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயணிகளில் சிலர் விமான உள்நடப்புக்கு இடையூறும் வகையில் நடந்துகொண்டு, பணியாளர்களின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மீறியதுடன், அவசரகால உபகரணங்களை சேதப்படுத்தும் […]

இலங்கை

2041 ஆம் ஆண்டுக்குள் இலங்கை மக்கள் மத்தியில் ஏற்படவுள்ள மாற்றம்

  • July 26, 2025
  • 0 Comments

இலங்கையில் 2041 ஆம் ஆண்டுக்குள் நான்கு பொதுமக்களில் ஒருவர் முதியவராக இருப்பார்கள் என சுகாதார அமைச்சு கணிப்பிடுகிறது. இது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க விளக்கமளித்தார். “நாட்டின் முதியோர் சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப சுகாதார திட்டங்களும், சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளும் விரிவுபடுத்தப்பட வேண்டும்,” என்றார். மேலும், 2050 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த மக்கள் தொகை சுமார் 25 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதையும் அவர் […]

error: Content is protected !!