ஆசியா

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு ஆதரவாக செயற்பட்ட 108 பேருக்கு சிறை தண்டனை!

  • August 1, 2025
  • 0 Comments

2023 ஆம் ஆண்டு ராணுவ எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த 108 பேருக்கு பாகிஸ்தான் அரசு தண்டனை விதித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தானில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலர் தண்டனை பெற்றுள்ளனர். பயங்கரவாதம் மற்றும் அரசு ரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளில் இம்ரான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது. நேற்று (31), பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர் உமர் அயூப் கானுக்கும் 10 ஆண்டுகள் […]

ஆசியா

பிடிபட்ட 2 கம்போடிய வீரர்களை விடுவித்த தாய்லாந்து ராணுவம் ; கம்போடிய பாதுகாப்பு அமைச்சகம்

  • August 1, 2025
  • 0 Comments

போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு தாய்லாந்து ராணுவம் கைப்பற்றிய 20 கம்போடிய வீரர்களில் இருவரை வெள்ளிக்கிழமை விடுவித்ததாக கம்போடிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆகஸ்ட் 1, 2025 அன்று காலை 11:00 மணி நிலவரப்படி, தாய்லாந்து தரப்பு இரண்டு கம்போடிய வீரர்களை மட்டுமே திருப்பி அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை வெளியுறவுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான லெப்டினன்ட் ஜெனரல் மாலி சோச்சியாட்டா ஒரு அறிக்கையில் தெரிவித்தார். எனவே, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி மீதமுள்ள […]

வட அமெரிக்கா

அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு தாய்லாந்து, கம்போடியா மீது டிரம்ப் 19% வரியை விதித்த அமெரிக்கா

  • August 1, 2025
  • 0 Comments

அமெரிக்கா அதிபர் டோனல்ட் டிரம்ப், தாய்லாந்து, கம்போடியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள்மீது 19% வரியை விதித்துள்ளார். இதற்குமுன் 36% வரியை விதிக்கப்போவதாக அவர் கூறியிருந்தார். தாய்லாந்தும் கம்போடியாவும் மோசமான எல்லைப் பூசலை நிறுத்தாவிட்டால் அவற்றுடனான வர்த்தக உடன்பாடுகளை முடக்கப்போவதாகவும் டிரம்ப் ஜூலை மாதம் எச்சரித்திருந்தார். இவ்வாரத் தொடக்கத்தில் தாய்லாந்தும் கம்போடியாவும் சண்டைநிறுத்தத்திற்கு உடனடியாக ஒப்புக்கொண்டன. பத்தாண்டுகளில் இல்லாத வகையில் நடைபெற்ற இருநாட்டு மோதலில் 40க்கும் அதிகமானோர் உயி,இழந்தனர். கம்போடியாமீது அமெரிக்கா விதித்த 19% வரி மக்களுக்கும் நாட்டின் […]

ஐரோப்பா

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத் தீ – ஆயிரக்கணக்கான ஹெக்டேர்கள் கருகின

  • August 1, 2025
  • 0 Comments

போர்ச்சுகல், பல்கேரியா மற்றும் ஸ்பெயின் போன்ற தென் ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ நிவாரண பணிகள் முழு அளவில் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. வெப்ப வெள்ளம் மற்றும் வறட்சி காரணமாக பரவிய காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதிகள் தீயில் கருகி வருகின்றன. அரோகா மலைத் தொடரில் ஏற்பட்ட காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த போர்ச்சுகல் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மீட்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கேசரஸ் கிராமத்துக்கு அருகே தீயின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அந்தப் பகுதியில் […]

அறிவியல் & தொழில்நுட்பம் இன்றைய முக்கிய செய்திகள்

6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் உலகம் – நாசா வெளியிட்ட தகவல்!

  • August 1, 2025
  • 0 Comments

கடந்த சில நாட்களாக நாளை உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் இது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வு என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கு நாசா மறுத்துள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் நகர்ந்து வந்து சூரியனை முழுவதுமாக மறைக்கும்போது தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் சூரியனின் வெளிச்சம் சிறிது நேரத்திற்கு பூமி மேல் விழாது. இதுவே சூரிய கிரகணம் ஆகும். 2025-ம் ஆண்டின் அடுத்த சூரிய […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி – சிரியா மீது வரலாறு காணாத வரி விதித்த டிரம்ப்

  • August 1, 2025
  • 0 Comments

வெளிநாட்டு பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் நோக்கில், அமெரிக்கா பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு உயர்ந்த இறக்குமதி வரிகளை அறிவித்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சிரியா மீது 41% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது அந்த நாட்டிற்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள மிக உயர்ந்த வரியாகும். அதேபோல், லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும் எனவும், சுவிட்சர்லாந்து மீது 39%, செர்பியா மற்றும் ஈராக் மீது 35%, அல்ஜீரியா மற்றும் லிபியா மீது […]

ஆப்பிரிக்கா

வேட்டையாடுதல் எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகம்!

  • August 1, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகம் ஒன்று வேட்டையாடுதல் எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. காண்டாமிருகங்களின் கொம்புகளில் ஊசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. அணுசக்தி அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்களின் கூட்டுத் திட்டத்தின் கீழ், குறைந்து வரும் காண்டாமிருக எண்ணிக்கையை அதிகரிக்கும்க நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவில் கூட கதிரியக்க ஐசோடோப்புகளை விமான நிலையங்கள் மற்றும் எல்லைகளில் உள்ள கதிர்வீச்சு கண்டுபிடிப்பாளர்களால் அடையாளம் காண முடியும், இது வேட்டைக்காரர்கள் மற்றும் கடத்தல்காரர்களைக் கைது செய்ய வழிவகுக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

வாழ்வியல்

கண்களை பாதுகாக்க உதவும் எளிய வழிமுறைகள்!

  • August 1, 2025
  • 0 Comments

நவீன வாழ்க்கைமுறையால் கண்களுக்கு ஏற்படும் சோர்வு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும், ஆரோக்கியமாக வைப்பதற்கும் கீழ்கண்ட வழிமுறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன: தினசரி கண் சுத்தம்: சுத்தமான குளிர்ந்த நீரால் கண்களை தினமும் கழுவுவதால் கண் எரிச்சல் குறையும் மற்றும் சீரான உணர்வும் ஏற்படும். வெள்ளரிக்காய் குளிர்ச்சி: வட்டமாக நறுக்கிய வெள்ளரிக்காய்களை கண்களுக்கு மேல் வைக்கவும். இது கண்களுக்கு குளிர்ச்சி அளித்து ரிலாக்ஸ் உணர்வை தரும். ரோஸ் வாட்டர் பயன்: பஞ்சில் ரோஸ் வாட்டரை நனைத்து கண்களில் […]

செய்தி

ஈரானுடன் தடையை மீறிய வர்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை

  • August 1, 2025
  • 0 Comments

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, ஈரானுடன் தடைகளை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்ட 20 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 6 இந்திய நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. அந்த நிறுவனங்கள், ஈரானில் இருந்து பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களுடன் தொடர்புடைய வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இதன் விளைவாக, அந்த நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வணிகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட இந்திய நிறுவனங்கள் வருமாறு: Alchem Chemical Solutions Pvt. Ltd. […]

உலகம்

கர்நாடகா பெண்ணுக்குப் புதிய வகை இரத்தம் – உலகத்தில் இதுவரை பதிவு செய்யப்படாத வகை

  • August 1, 2025
  • 0 Comments

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு, உலகத்தில் இதுவரை யாரிடமும் கண்டறியப்படாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவ துறையில் முக்கியமான புதிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. அந்த பெண், இருதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மேற்கொள்ளப்பட்ட இரத்த சோதனையில் தன்னுடைய இரத்தம் “O Rh-Positive” வகை என ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்டது. எனினும், மேலும் சிக்கலான பரிசோதனைகளுக்காக அவரது இரத்த மாதிரி இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை ஆய்வு மையத்திற்கு […]

error: Content is protected !!