ஆசியா

வியட்நாமை உலுக்கிய சூறாவளி – 500,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்

  • August 25, 2025
  • 0 Comments

வியட்நாமை நெருங்கி வரும் சூறாவளி காஜிகி என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 500,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, தான் ஹோவா, குவாங் ட்ரை, ஹியூ மற்றும் டா நாங் நகரங்களில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. புயல் ஏற்கனவே மணிக்கு 103 மைல் வேகத்தில் காற்று வீசி வருகிறது. கனமழை பெய்யும் என்று வியட்நாம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

விளையாட்டு

புஜாரா ஓய்வு – பிசிசிஐ மீது அதிருப்தி வெளியிட்ட ரசிகர்கள்

  • August 25, 2025
  • 0 Comments

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா நேற்று அறிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான புஜாரா, இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள், 35 அரை சதங்களை விளாசியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்டுக்கு அடுத்தபடியாக ‘இந்தியாவின் சுவர்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் புஜாரா. டெஸ்ட் கிரிக்​கெட்​டில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

தண்ணீர் குடிக்காதவர்களை பாதிக்கும் மன அழுத்தம் – புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • August 25, 2025
  • 0 Comments

தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்கள், அதிக கார்டிசோல் (மன அழுத்த ஹார்மோன்) வெளிப்பாடுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வில், தினசரி 1.5 லிட்டருக்கும் குறைவாக தண்ணீர் குடித்தவர்களும், பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடித்தவர்களும் (ஆண்களுக்கு 2.5 லிட்டர், பெண்களுக்கு 2 லிட்டர்) ஒப்பிடப்பட்டனர். இரு குழுக்களும் மன அழுத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது, தண்ணீர் குறைவாக குடித்தவர்களில் அதிக கார்டிசோல் அளவு பதிவாகியது. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு வசதியாக ‘Link a Reel’ அறிமுகம்!

  • August 25, 2025
  • 0 Comments

மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்காக புதிய ‘Link a Reel’ அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம், உள்ளடக்க படைப்பாளர்கள் தங்கள் ரீல்ஸ்களை ஒரு தொடராக இணைப்பதற்கு வசதி செய்கிறது, இதனால் பார்வையாளர்கள் தொடர்புடைய வீடியோக்களை எளிதாக பின்தொடர்ந்து பார்க்க முடியும். இந்தப் புதிய வசதி, ‘பகுதி 1’, ‘பகுதி 2’ போன்ற தொடர் வடிவ ரீல்ஸ்களை ஒழுங்குபடுத்தி, பயனர்களுக்கு தடையில்லாத அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அம்சம் உலகளவில் அனைத்து இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் படிப்படியாக வழங்கப்படுகிறது. […]

இலங்கை

ரணிலின் நலம் விசாரிக்க வருபவர்களை மட்டுப்படுத்த நடவடிக்கை

  • August 25, 2025
  • 0 Comments

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் ருக்‌ஷான் பெல்லன கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பார்வையிட அனுமதித்தால் அது பொருத்தமானதாக இருக்கும் என மருத்துவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு தற்போது ஓய்வு தேவை. […]

இலங்கை

இலங்கையில் இன்று பெரும்பாலும் மழை இல்லாத வானிலை

  • August 25, 2025
  • 0 Comments

இலங்கையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலும் மழை இல்லாத வானிலை நிலவும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை […]

உலகம்

உலக வெப்பமயமாதலால் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் ஆபத்தில்

  • August 25, 2025
  • 0 Comments

உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலை, வேலைக்குச் செல்கின்ற மக்களின் உடல்நலத்துக்கும் செயல்திறனுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என ஐ.நா எச்சரித்துள்ளது. அதிக வெப்பத்தால், திறந்தவெளியில் மற்றும் குளிரூட்டப்படாத அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றது. உடனடியாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், ஐ.நா. அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 20 டிகிரி செல்சியஸை கடந்தபின், ஒவ்வொரு கூடுதல் டிகிரிக்கும் ஊழியர்களின் செயல்திறன் 2% முதல் 3% வரை குறைகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் சிறுவர்களின் உணவு தொடர்பில் அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை – 18 மாத அவகாசம்

  • August 25, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சீனி மற்றும் உப்பின் அளவைக் குறைக்க உணவுத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசாங்கம் புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான உணவுச் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு இந்த மாற்றங்களை செயல்படுத்த 18 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகளை அறிமுகப்படுத்த வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

ரணிலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – எரிக் சோல்ஹெய்ம் கோரிக்கை

  • August 25, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் தானும் இணைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது ‘X’ கணக்கில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறான கோரிக்கை விடுத்துள்ளார்.  

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

அமெரிக்கா – ரஷ்ய உறவுகளில் ஏற்பட்டுள்ள புதிய வெளிச்சம் – மகிழ்ச்சியில் புட்டின்

  • August 25, 2025
  • 0 Comments

  அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான உறவுகளில் புதிய ஒளி தென்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். சரோவ் நகரில் அமைந்துள்ள அணு ஆயுத ஆய்வு மற்றும் உற்பத்தி நிலையத்தினை பார்வையிட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலைமைத்துவ குணங்கள், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்” என நம்புவதாகக் கூறினார். அலாஸ்காவில் நடந்த இருதரப்பு சந்திப்பு குறித்து அவர், “மிகவும் வெளிப்படையான மற்றும் அர்த்தமுள்ள உரையாடல் நடைபெற்றது” என்றார். […]

error: Content is protected !!