இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ரஷ்யா – உக்ரைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை

  • August 26, 2025
  • 0 Comments

ரஷ்யாவும் உக்ரைனும் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தத் தவறினால், 2 நாடுகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்த 2  வாரங்களில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து தனது முடிவு இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்றால், பெரிய விளைவுகள் ஏற்படக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார். ரஷ்ய மற்றும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுள் டயலர் UI மாற்றம் – சிக்கலில் பயனர்கள்

  • August 26, 2025
  • 0 Comments

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ‘கூகுள் போன்’ செயலிக்கு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில், புதிய யூசர் இன்டர்ஃபேஸ் (UI), சைகைகள் மற்றும் மெட்டீரியல் டிசைன் 3 போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எதிர்ப்புகளைச் சந்தித்த புதிய யுஐ திடீர் மாற்றத்தால் பயனர்கள் மகிழ்ச்சியாக இல்லை. டயலர் செயலியின் இண்டர்பேஸ் மட்டுமன்றி, அழைப்புகளை ஏற்பது மற்றும் துண்டிப்பது போன்ற செயல்பாடுகளும் மாறியுள்ளதால், தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களுக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த […]

விளையாட்டு

42 பந்தில் சாம்சன் சதம் – ஆசியாவுக்கு தயாராகும் சஞ்சு

  • August 26, 2025
  • 0 Comments

கேரளா கிரிக்கெட் லீக் போட்டியில் 42 பந்தில் சதம் விளாசினார் சஞ்சு சாம்சன். கேரளாவில் உள்ளூர் ‘டி-20’ கிரிக்கெட் தொடர் நடக்கிறது. திருவனந்தபுரத்தில் நடந்த லீக் போட்டியில் கொல்லம், கொச்சி அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய கொல்லம் அணிக்கு விஷ்ணு (94), கேப்டன் சச்சின் பேபி (91) கைகொடுக்க, 20 ஓவரில் 236/5 ரன் குவித்தது. கடின இலக்கைத் துரத்திய கொச்சி அணிக்கு சஞ்சு சாம்சன், சிக்சர் (7), பவுண்டரி (14) மழை பொழிந்தார். 42 பந்தில் […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

  • August 26, 2025
  • 0 Comments

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய […]

இலங்கை

ரணிலுக்காக 300 வழக்கறிஞர்கள் களத்தில் – நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு – ஒன்றுக்கூடும் எதிர்கட்சி

  • August 26, 2025
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனுக்கு 2 நாள் தனிப்பட்ட விஜயத்தின் போது அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் […]

ஆசியா

பாகிஸ்தானை உலுக்கும் காலநிலை – 19,000 மக்கள் வெளியேற்றம்

  • August 26, 2025
  • 0 Comments

பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 19,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேரழிவு சூழ்நிலை காரணமாக மாகாணத்தில் அவசர சேவைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, அடுத்த 96 மணிநேரம் பஞ்சாப் மாகாணத்திற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் பல மாவட்டங்களை கனமழையால் பாதித்த வெள்ள நிலைமை மேலும் மோசமடையும் என்று வானிலை சேவை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

ரணிலுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அவசியம் – 5 சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் அறிவிப்பு

  • August 26, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் 5 சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து நேற்று மதியம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அவரது உடல்நிலை திருப்திகரமாக இல்லை என்றும் கூறப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார். இதுபோன்ற பின்னணியில், அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிர்ச்சி – பெண்ணின் உடலில் தசையை தின்னும் ஒட்டுண்ணி

  • August 26, 2025
  • 0 Comments

அமெரிக்க பெண் ஒருவர், மனிதர்களை மிகவும் அரிதாகவே தாக்கும் “screwworm” எனப்படும் கொடிய ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த ஒட்டுண்ணி பொதுவாக வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளில் காணப்படும் ஒன்று. ஆனால் இப்போது, மெக்ஸிகோக்கு அருகிலுள்ள குவாட்டமாலா நாட்டுக்குப் பயணித்த பிறகு, மேரிலந்து (Maryland) மாநிலத்தில் உள்ள பெண் ஒருவருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது. Screwworm எனப்படும் இந்த ஒட்டுண்ணி, உடலில் உள்ள திறந்த காயங்கள் வழியாக நுழைந்து, உயிரின் தசைகளைத் தினத் தொடங்குகிறது. இது கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கே உயிர் […]

ஆசியா செய்தி

பணத்திற்காக காதலனை விற்பனை செய்த காதலி – சீனாவில் அதிர்ச்சி சம்பவம்

  • August 26, 2025
  • 0 Comments

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், 100,000 யுவான் பணத்திற்காக தனது காதலனை மியன்மார் மோசடி கும்பலிடம் விற்ற அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த 19 வயது ஹுவாங், 17 வயதான சோவுடன் காதல் உறவில் இருந்துள்ளார். இருவரும் ஒன்றாக வசிக்கத் தொடங்கினர். பின்னர், சோவின் வற்புறுத்தலால் ஹுவாங் வேலை வாய்ப்புக்காக மியன்மாருக்கு செல்லத் திட்டமிட்டார் உறவினர்களிடம் எதுவும் சொல்லாமல் ஹுவாங், சோவுடன் தாய்லந்துக்குச் சென்றார். ஆனால் அங்கிருந்து அவர் மியன்மாரில் உள்ள இணையவழி மோசடி […]

இலங்கை செய்தி

பிரபல இலங்கை ராப் பாடகர் மாதவ் பிரசாத் கைது

  • August 25, 2025
  • 0 Comments

‘மாதவ் பிரசாத்’ என்று அழைக்கப்படும் ‘மதுவா’ என்ற ராப் பாடகர், போலி கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். ஆறு பேர் கொண்ட குழு, போதைப்பொருள் மற்றும் கைத்துப்பாக்கியை வைத்திருந்து போதைப்பொருள் உட்கொள்வதைக் காட்டும் பேஸ்புக் வீடியோ தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், ஹோமாகம பகுதியில் உள்ள வீட்டு வளாகத்தில் சந்தேகநபரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலும் விசாரணை நடத்தியதில், அவர் தனது பேஸ்புக் பயனர் எண்ணிக்கையை […]

error: Content is protected !!