இந்தியா

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுடன் பயணித்த எலியால் பரபரப்பு!

  • September 22, 2025
  • 0 Comments

கான்பூரிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், எலியொன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து விமானத்தில் இருந்த 140 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பயணம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தாமதமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.55 மணிக்கு கான்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய விமானம் மாலை 06 மணியளவில் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கான்பூர் விமான நிலைய ஊடகப் பொறுப்பாளர் விவேக் சிங், விமானத்தில் ஒரு எலி இருந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த […]

ஐரோப்பா

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலைத் தீர்க்க இரு நாடுகள் தீர்வுதான் ஒரே சாத்தியமான வழி : ரஷ்யா

  • September 22, 2025
  • 0 Comments

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலைத் தீர்ப்பதற்கான ஒரே சாத்தியமான பாதை இரு நாடுகள் தீர்வுதான் என்று ரஷ்யா திங்களன்று குறிப்பிட்டது. செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் அடிப்படைத் தீர்மானங்களுக்கும், இரு நாடுகள் தீர்வு மூலம் நடந்து வரும் மோதலைத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறு குறித்த சர்வதேச நிலைப்பாட்டிற்கும் மாஸ்கோ உறுதிபூண்டுள்ளதாகக் கூறினார். எனவே, இந்த அணுகுமுறை எங்களுடையது, மேலும் இந்த சிக்கலான மற்றும் நீண்டகால மோதலுக்கு ஒரு தீர்வைக் கண்டறிவதற்கான ஒரே சாத்தியமான பாதை […]

இலங்கை

இலங்கையின் தெற்கு பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரம்!

  • September 22, 2025
  • 0 Comments

தெற்கில் அரசியல்வாதிகள் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், பொதுமக்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த கால அரசியல் கலாச்சாரம் காரணமாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகள் வளர்ந்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம்  அதில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது என்றும் […]

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

சான்பிரான்சிஸ்கோவில் வலுவான நிலநடுக்கம் பதிவு – வீடுகள் குலுங்கியதால் பரபரப்பு!

  • September 22, 2025
  • 0 Comments

சான் பிரான்சிஸ்கோவில்  இன்று (22.09) அதிகாலையில்  ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் பின்அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், ஆபத்துகள் உள்ளதா என சரிபார்க்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியேகவில்லை. குறித்த பகுதியில் அதிகாரிகள் தொடர்சியாக ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

ஸ்பெயினில் நடுவானில் கொந்தளிப்பில் சிக்கிய விமானம் – அச்சத்தில் 180 பயணிகள்!

  • September 22, 2025
  • 0 Comments

ஸ்பெயினின் விட்டோரியாவிலிருந்து மல்லோர்காவில் உள்ள பால்மாவுக்குப் புறப்பட்டுச் சென்ற ரயான்ஏர் விமானம் நடுவானில் கொந்தளிப்பில் சிக்கியுள்ளது. இதன்காரணமாக குறித்த விமானமானது சன் சாண்ட் ஜோன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன்போது விமானத்தில் 180 பயணிகள் பயணித்த நிலையில் அவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டுள்ளனர். அத்துடன் விமானப் பணியாளரில் ஒருவர் காற்றில் தூக்கியெறியப்பட்டு விமானத்தின் கூறையில் மோதியதில் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது நின்று கொண்டிருந்த பல பணியாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மல்லோர்காவில் ஏற்பட்ட புயல்கள், தலைநகர் […]

பொழுதுபோக்கு

“ஸ்பைடர்மேன்” டாம் ஹாலண்ட் வைத்தியசாலையில் அனுமதி

  • September 22, 2025
  • 0 Comments

ஹாலிவுட்டில் ‘ஸ்பைடர்மேன்- பிராண்ட் நியூ டே’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. டெஸ்டின் டேனியல் இயக்கும் இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது ஏற்பட்ட விபத்தில் டாம் ஹாலண்டின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் லேசாக அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சொல்லி சிகிச்சை அளித்து வருகிறார்களாம். அதனால் டாம் ஹாலண்ட் […]

மத்திய கிழக்கு

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

  • September 22, 2025
  • 0 Comments

காசாவுக்கு எதிராக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில், 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கியது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த சூழலில், லெபனான் நாட்டின் தெற்கே பின்ட் பெய்ல் நகர் மீது இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் நள்ளிரவு தொடங்கி கடுமையான தாக்குதலை நடத்தி உள்ளன. போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் […]

பொழுதுபோக்கு

‘திரிஷயம் 3’ படம் பூஜையுடன் ஆரம்பமானது

  • September 22, 2025
  • 0 Comments

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க உள்ள ‘திரிஷயம் 3’ படத்தின் பூஜை இன்று ஆரம்பமானது. மீனா, ஆஷா சரத், அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்த இதன் முதல் பாகம் 2013ல் வெளியாகி வரவேற்பைப் பெற்று 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இரண்டாம் பாகம் 2021ல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. அப்போது கொரானோ இரண்டாம் அலை இருந்ததால் தியேட்டர்களில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டார்கள். முதல் பாகம் படம் தமிழில் […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகை மீது கொதிக்கும் எண்ணெய் கொட்டியதால் பரபரப்பு

  • September 22, 2025
  • 0 Comments

புஷ்பகவிமானம், புட்டாகதலு’ படங்களில் நடித்த சான்வி மேக்னா ‘குடும்பஸ்தன்’ படத்தில் மணிகண்டன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். குடும்பஸ்தன் படத்தில் குடும்ப தலைவியாக நடித்தாலும், சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இசை அமைப்பாளர் சாய் அபயங்கரின் ஆல்பம் ஒன்றில் தோன்றினார். இந்நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்றபோது, அருகில் இருந்த சூடான எண்ணெய் கொட்டி கை முழுக்க படுகாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். ‘விபத்துகள் எதிர்பாராத விதமாக நடக்கத்தான் செய்யும். மீண்டு வருவது […]

ஐரோப்பா

பால்டிக் கடலுக்கு மேலே அடையாளம் தெரியாமல் பறந்த ரஷ்ய விமானம்!

  • September 22, 2025
  • 0 Comments

ரஷ்யா அண்மைக்காலமாக பிற நாடுகளின் வான்பரப்பில் ஊடுருவி வருகின்றது. இது சர்வதேச ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) பால்டிக் கடலுக்கு மேலே அடையாளம் தெரியாத வகையில் ரஷ்யாவின் கண்காணிப்பு விமானம் ஒன்று பறந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட  ஜெர்மனி மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த விமானப்படை போர் விமானங்கள் அதனை இடைமறிக்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய IL-20 உளவு விமானத்தைக் கண்காணிக்கவும் புகைப்படம் எடுக்கவும் சர்வதேச வான்வெளியில் இரண்டு ஸ்வீடிஷ் கிரிபன் […]

error: Content is protected !!