கேரள-தமிழ்நாடு எல்லையில் தென்பட்ட அரிய வகை வெள்ளை அணில்
அரிதினும் அரிய காட்சியாக, கேரள – தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது. அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியராகப் பணிபுரியும் சுமேஷ் என்பவர் அதனைப் படம்பிடித்தார். பல ஆண்டுகளாகவே சுமேஷ் அவ்வட்டாரத்தின் பல்லுயிர்ச்சூழலைக் கண்காணித்து வருகிறார். அத்துடன், இயற்கை மரபுடைமையைப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் அமைப்பான திருவனந்தபுரம் ஷோலா இயற்கைச் சமூகத்திலும் அவர் உறுப்பினராக இருக்கிறார். ‘லூசிசம்’ (leucism) எனும் அரியவகை மரபணு நிலைமையால், […]













