ஐரோப்பா

இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு : மக்களுக்கு எச்சரிக்கை!

இங்கிலாந்தின் சில பகுதிகளில் இன்று 5cm வரை பனிப்பொழிவு காணப்படலாம் எனவும் சில பகுதிகளில் வெப்பநிலை -10C (14F) வரை குறையும் எனவும் met office தெரிவித்துள்ளது.

மூன்று மஞ்சள் வானிலை எச்சரிக்கைகள் தற்போது நடைமுறையில் உள்ளன, வானிலை அலுவலக முன்னறிவிப்பாளர்கள் வார இறுதியில் குளிர் நிலைகள் நீடிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

ஸ்காட்லாந்தில் இருந்து கிழக்கு ஆங்கிலியா வரையிலான இங்கிலாந்தின் முழு கிழக்குக் கடற்கரையும் இன்று காலை 11 மணி வரை பனி  பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாலை மற்றும் இரயில் பயணங்கள் வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கலாம் என்றும், அப்புறப்படுத்தப்படாத  பனிக்கட்டிகள் வழுக்கி விழுவதற்கும் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்து மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் காலை 10 மணி வரை பனிக்கான எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன, மழையைத் தொடர்ந்து வெப்பநிலை உறைபனிக்குக் கீழே வீழ்ச்சியடைவதால் மோசமான நிலமை உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்