உலகம்

ஜப்பானில் மின்விநியோகம் துண்டிப்பு : 9 பேர் பலி!

ஜப்பானை தாக்கிய ஜாங்மி (Jangmi ) புயல் காரணமாக 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் புயல் காரணமாக, கியூஷுவில் (Kyushu) உள்ள மியாசாகி (Miyazaki) நகரில்  கிட்டத்தட்ட 400,000 குடியிருப்பாளர்கள் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஒகினாவாவைத் தாக்கிய குறித்த புயல் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பல பகுதிகளில் பரவலான மழை பெய்யும் என்றும், பலத்த காற்று வீசக்கூடும் என்றும முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுமார் 600 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!