ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுப்பதில் G-7 நாடுகள் உறுதி
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது எரிசக்தி விலைகளைக் குறைக்க உதவும் என்று பிரித்தானிய பிரதமர் Keir Starmer நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
G7 மாநாட்டில் பங்கேற்றுள்ள அவர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.
ஹார்முஸ் நீரிணைமீள திறக்கப்படுவது பிரித்தானியாவுக்கு மிக முக்கியமானதும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
அமைதி ஒப்பந்தம் குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டமை தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இதர தூதர்களுக்கு பிரித்தானிய பிரதமர், பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதில் G7 நாடுகள் உறுதியாக இருப்பதை Keir Starmer மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.




