ஐரோப்பா செய்தி

எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி! பிரான்ஸ் புது வியூகம்!!

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலையேற்றத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஐரோப்பா முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை குறிவைத்து இந்த வரி அமுல்படுத்தப்படவுள்ளது.

பிரான்ஸ் நிதி அமைச்சர் ரொலண்ட் லெஸ்குர் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

எரிசக்தி விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட உள்நாட்டு மக்களையும், சிறு வணிகங்களையும் பாதுகாக்க பிரான்ஸ் அரசு ஏற்கனவே பல்வேறு நிவாரண உதவிகளையும் மானியங்களையும் வழங்கியுள்ளது.

இந்த நிவாரண நடவடிக்கைகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிதிச் சுமையை (Fiscal Deficit) சமன் செய்ய கூடுதல் நிதி தேவைப்படுகிறது.

நெருக்கடியான காலகட்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டும் அநியாய லாபத்தைக் கட்டுப்படுத்தி, அதை நாட்டின் பொருளாதார மீட்சிக்குப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!