இலங்கை

ரத்னபுர பகுதியில் வீடொன்றில் தீ விபத்து : ஒருவர் பலி!

ரத்னபுர மல்வல வீதி பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீடு ஒன்று தீப்பற்றி எரிவதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக செயற்பட்ட இரத்தினபுரி தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் வீட்டின் இரண்டு அறைகள் எரிந்து நாசமானதுடன், அங்கு தங்கியிருந்த ஒருவர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 54 வயதுடையவர் என்றும், அவர் பிள்ளைகளை பிரிந்து தனியாக இந்த வீட்டில் வசித்து வந்தவர் எனவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!