இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் பேஸ்புக் விருந்து சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 76 பேர் கைது

பேஸ்புக் விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு 76 சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீதுவ, பெல்லனாவத்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி பேஸ்புக் விருந்து நடத்தப்படுவதாக சீதுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களும் பெண்களும் ஐஸ் மற்றும் கஞ்சா உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

14 ஆண்கள் உட்பட மூன்று சந்தேக நபர்கள் நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஐஸ், கேரள கஞ்சா மற்றும் சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த விருந்தில் பங்கேற்ற 12 இளம் பெண்கள் மற்றும் 47 இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்