இன்றைய முக்கிய செய்திகள் செய்தி மத்திய கிழக்கு

தீவிரமடையும் போர் பதற்றம் – ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் பகுதியில் பல வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் போர் பதற்றம் தொடர்பில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.

தெஹ்ரானின் மேற்கு பகுதியில் 7 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் அங்குள்ள இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதில் வழங்கும் நோக்கில் தாக்குதல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நிலைமையை அவதானித்து வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.

அதேநேரம், ஈரான் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அத்துடன் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட தகவல்களும் வெளியாகவில்லை.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி