உலகம் செய்தி

பிரேசிலில் உயிரிழந்த குழந்தை – இறுதிச்சடங்கின்போது அசைந்த விரல்கள்

பிரேசிலில் உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்ட 8 மாதக் குழந்தையின் இறுதிச்சடங்கின்போது அதன் விரல்களை அசைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கியாரா (Kiara) என்ற குழந்தை வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுள்ளார். இம்மாதம் 19ஆம் திகதி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

கியாரா மூச்சுவிடவில்லை; அதன் இதயத் துடிப்பும் நின்றது. சிறிது நேரத்திற்குப் பின்னர் மருத்துவர்கள் கியாரா உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கியாராவின் இறுதிச்சடங்கின்போது உறவினர் ஒருவர் அதன் கையைத் தொட்டபோது கியாரா பதிலுக்கு அதன் விரல்களை அசைத்ததாகக் கூறப்பட்டது.

கியாராவின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் குடும்பத்தினர் கியாராவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவ ஊழியர்கள் கியாராவைக் காப்பாற்ற முயன்றதாகவும் அவர்களது முயற்சி கைகொடுக்கவில்லை. கியாராவின் இதயத்துடிப்பு மறுபடியும் நின்றது.

இம்முறை கியாரா உயிர்பிரிந்தது உறுதியானது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி