ஆசியா

இந்தோனேசியாவை சூழ்ந்த கருமேகங்கள் : எரிமலை வெடிப்பால் அச்சத்தில் மக்கள்!!

இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணத்தில் உள்ள மவுண்ட் இபு என்ற எரிமலை வெடித்துள்ளது.

இது ஐந்து நிமிடங்களுக்கு 5,000 மீட்டர் உயரத்தில் அடர்த்தியான சாம்பல் மற்றும் கருமேகங்களை உமிழ்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சாம்பலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க முகமூடி அணியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கண், கை,கால்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. குறித்த பகுதியில் நிலநடுக்கங்கள் இன்னும் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆகவே எதிர்காலத்திலும் எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்