ஐரோப்பா

பிரித்தானியாவில் விசா இல்லாத தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

பிரித்தானியாவில் தமிழர் உட்பட புகலிட கோரிக்கையாளர்களை விரட்டி விரட்டி கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வீடுகள், பணியாற்றும் கடைகள் என பல இடங்களில் அதிரடியாக புகுந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கடைகளில் கைக்காசுக்கு பணியாற்றும் பல தமிழர்கள் ஆபத்தான நிலைமைய எதிர்நோக்கியுள்ளனர்.

ருவண்டாவிற்கு புகலிடக்கோரிக்கையாளர்களை அனுப்பும் நடவடிக்கைகளை திட்டத்தின் ஒரு பகுதியாக புகலிடக்கோரிக்கையாளர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்களுடன் முதலாவது விமானம் ஜூலை மாதம் முதல் வாரம் ருவாண்டா செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதியில்லாதவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிலெவெர்லி தெரிவித்துள்ளார்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்