ஐரோப்பா

உக்ரைனில் அணை தகர்ப்பு – நீரில் மிதக்கும் கண்ணிவெடிகளால் அச்சத்தில் மக்கள்

உக்ரைனின் கேர்சன் நகரில் நொவா கவோவ்கா அணை தகர்க்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பேரிடர் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கண்ணிவெடிகள் ஆபத்து உருவாகியுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை குழு தெரிவித்துள்ளது.

கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என செஞ்சிலுவை அதிகாரியொருவர் எச்சரித்துள்ளார்.

முன்னர் கண்ணிவெடிகள் எங்கு உள்ளன என எங்களிற்கு தெரிந்திருந்தது அணை தகர்ப்பிற்கு பின்னர் அவை எங்குள்ளன என்பது தெரியாத நிலையேற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரஸ்யா கைப்பற்றிய பகுதிகளில் புதைக்கப்பட்ட நிலகண்ணிவெடிகள் மிதக்கும் கண்ணிவெடிகளாக மாறியுள்ளன என உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவற்றால் பெரும் ஆபத்து ஏற்படலாம், இடிபாடுகளுடன் மோதுண்டால் அவை வெடிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்