இலங்கை

கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவால் சர்ச்சை!

கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய மற்றும் மோதர பொலிஸ் எல்லைகளுக்குள் மீண்டும் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றில் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பதிவு நடவடிக்கைள் ஏன் இடம்பெறுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார்.

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரும் கொழும்பில் வசிக்கும் தமிழர்களிடம் பொலிஸார் விபரம் கோருவது குறித்தும் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார்.

மேலும் குறித்த விபரத்தில் என்ன சமயத்தவர் என்று கேட்பது தீபாவளி பொங்கலுக்கு வாழ்த்து அனுப்பவா என்றும் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார்

இதேநேரம் குறித்த பதிவு நடவடிக்கைகளுக்கான விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் மாத்திரமே உள்ளதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்