இலங்கை செய்தி

யாழில் குழந்தை மரணம் – சித்திரவதைக்கு உள்ளாக்கியதை ஒப்புவித்த தாய்

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை தாய்ப்பால் அருந்திய பின்னர் குழந்தை அசைவின்றி காணப்பட்டதாக அளவெட்டி வைத்தியசாலையில் குழந்தையை அனுமதித்த நிலையில் , அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , உட்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது , கைகள் , கால்களின் எலும்புகளில் முறிவுகள் , தலையில் பலமாக தாக்கப்பட்ட காயங்கள் , கண்டல் காயங்கள், உள்ளிட்டவை கண்டறியப்பட்டு, குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என அறிக்கையிடப்பட்டது.

அதனை அடுத்து குழந்தையின் தாயாரை கைது செய்த பொலிஸார் தாயாரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்போது , குழந்தை பால் குடிக்க மறுத்தமையால் கைகள் கால்களை திருகியதாகவும் , தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் , தலையை சுவரில் மோதியதாகவும் குழந்தையின் கால்களை தான் ஏறி மிதித்தாகவும் , காதுக்குள் பிரம்பை விட்டு குத்தியதாகவும் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின்பின்னர் தாயாரை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தியவேளை தாயை 07 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மன்று , தாயை மனநல மருத்துவரிடம் முற்படுத்தி , மருத்துவ அறிக்கையை பெற்று மன்றில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை