இலங்கை

இலங்கையில் அடுத்த 36 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படும் மாற்றம் : மக்களுக்கு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் சமீபத்திய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று (01) பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இது, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100mm மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், மாலை அல்லது இரவில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சூழ்நிலை தற்போதும் சாதகமாக இருப்பதால் மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்