வட அமெரிக்கா

“முடிந்தால் எங்களைப் பிடியுங்கள்” – அமெரிக்க சிறையிலிருந்து தப்பிச் சென்ற 10 கைதிகள்

அமெரிக்காவின் நியூ ஓர்லின்ஸ் சிறைச் சாலையிலிருந்து 10 கைதிகள் தப்பித்துள்ளனர்.

கைதிகள் வெள்ளிக்கிழமை (மே 16) நள்ளிரவுக்குப் பின் கழிவறைச் சுவரை உடைத்துத் தப்பித்ததாகச் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதிகள் தப்பிச் சென்ற சில மணி நேரத்திற்குப் பிறகுதான் அதிகாரிகள் சதித்திட்டம் குறித்து உணர்ந்தனர்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் நியூ ஓர்லின்ஸ் பகுதியில் இச்சம்பவம் நடந்தது சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தப்பிச் சென்ற 10 கைதிகளில் ஒன்பது பேர் ஆபத்தானவர்கள் என்றும் அவர்களிடம் ஆயுதம் இருக்கலாம் என்றும் காவல்துறை எச்சரித்தது.கைதிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை காலை சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில் ஒரு கைதி கைது செய்யப்பட்டார். அவர் ஒரு காருக்குக் கீழ் பதுங்கியிருந்தபோது அதிகாரிகளிடம் சிக்கினார்.

தப்பிச் சென்ற கைதிகளில் சிலர் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்கள். தற்போது அவர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்