இந்தியா

மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்த பேருந்து; ஐவர் பலி… 10 பேர் படுகாயம்!

உத்தரப் பிரதேச மாநிலம், காஜிப்பூரில் தனியார் பேருந்து உயரழுத்த மின் கம்பி மீது உரசி தீப்பிடித்தது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில் இன்று, தனியார் பேருந்து ஒன்று 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மர்தா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பர்ஹி பகுதியில் வந்தபோது, மேலே இருந்த உயரழுத்த மின் கம்பி மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்து திடீரென தீப்பிடித்தது. இந்த தீ சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதனைப் பார்த்த அப்பகுதியினர் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் இருந்த சிலர் இந்த காட்சிகளை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

மின்கம்பி மீது உரசியதில் தீப்பிடித்த பேருந்து

அந்த வீடியோவில் கரும்புகையுடன் பேருந்து எரிந்து கொண்டிருப்பதை காணமுடிகிறது. பேருந்து விபத்தில் சிக்கி 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தில் மேலும் பல பயணிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அந்த பேருந்து மும்பையில் இருந்து வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த மர்தா காவல் நிலைய பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து குறித்து அறிந்த அம்மாநில முதல்வர் யோகி, ஆதித்யநாத், மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே