இந்தியா

துபாயிலிருந்து புதுடெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தோட்டாக்கள் மீட்பு

துபாயிலிருந்து புதுடெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தின் இருக்கையில் துப்பாக்கிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் பேச்சாளர் சனிக்கிழமை (நவம்பர் 2) தெரிவித்தார்.

அக்டோபர் 27ஆம் திகதி புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா ஏஐ916 விமானத்தில் ஒரு பையில் அத்தோட்டாக்கள் இருந்ததாகவும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்தைவிட்டு இறங்கியபிறகு நடத்திய சோதனையில் இது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் விமான நிலையக் காவல்துறையினரிடம் புகார் அளித்ததாக அவர் சொன்னார்.

மேலும், அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் நிறுவனம் தொடர்ந்து தீவிரமாகக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு, அனைத்துலக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட சூழலில் அவை அனைத்தும் போலியானவை எனத் தெரிய வந்தது. இருப்பினும், விமான நிலையங்களுக்கும் விமானங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தின் இருக்கையில் துப்பாக்கிக் குண்டுகள் கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே