ஐரோப்பா

பிரான்ஸில் கண்டுப்பிடிக்கப்பட்ட வெடிகுண்டு : லண்டன் மற்றும் பிரான்ஸில் ரயில் சேவைகள் இரத்து!

பிரான்ஸில்  இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய வெடிக்காத வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லண்டனுக்குச் செல்லும் யூரோஸ்டார் ரயில்களும் வடக்கு பிரான்சுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.

பிரான்சின் தேசிய ரயில் நிறுவனமான SNCF, காவல்துறையினரின் வேண்டுகோளின் பேரில், கரே டு நோர்டில் போக்குவரத்து நள்ளிரவு வரை நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

பயணிகள் தங்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கரே டு நோர்ட் ஒரு முக்கிய ஐரோப்பிய போக்குவரத்து மையமாகும், இது பிரான்சின் வடக்கே உள்ள சர்வதேச இடங்களுக்கும், முக்கிய பாரிஸ் விமான நிலையத்திற்கும் இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்