ஜன்னல் பாதுகாப்பு வேலியில் சிக்கியி

ஃபரிதாபாத்தில் உள்ள அஜ்ரோண்டா கிராமத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் சுவரில் உள்ள ஜன்னல் பாதுகாப்பு கம்பியில் புதிதாகப் பிறந்த குழந்தையின் சடலம் சிக்கியிருந்ததை இந்திய காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
புதிதாகப் பிறந்த சிசுவைச் சுவர் ஒன்றின் மேல் வீசி எறிய முற்பட்ட போது, குழந்தையின் சடலம் கூரிய பாதுகாப்பு கம்பியில் தொங்கியுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், சிசு வேண்டுமென்றே கொல்லப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் மரணம் ஏற்பட்டதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பாதுகாப்பு கம்பியில் குழந்தையின் சடலத்தை கண்ட பிரதேசவாசிகள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கீழே இறக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)