ஐரோப்பா செய்தி

UKவில் பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் புகலிடக் கோரிக்கையாளருக்கு 09 ஆண்டுகள் சிறை!

பிரித்தானியாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு 09 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி எரித்திரிய நாட்டு (Eritrean) புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர், மார்கேட் (Margate) கடற்கரையில் தனியாக நடந்து சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமர் முகமது என அறியப்படும் சந்தேகநபர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு  நேற்று கேன்டர்பரி கிரவுன் நீதிமன்றத்தில் (Canterbury Crown Court) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பத்து நாட்கள் நீடித்த விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தின் நடுவர் மன்றம், அவரை குற்றவாளியாக அறிவித்தது.

இதனைத் தொர்ந்து அவருக்கு  09 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி