இலங்கை

அனுரகுமார ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார்! விஜித ஹேரத்

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார் எனவும், பீதியடைய எந்த காரணமும் இல்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

1.3 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளதாகவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணுவது இறுதி முடிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.

வேட்பாளர்கள் எவரும் 50 சதவீதத்திற்கு மேல் பெறாததால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

வேட்பாளர்கள் 50 சதவீதத்திற்கு மேல் பெறத் தவறினால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகள் தேர்தல் சட்டத்தின்படி கணக்கிடப்பட வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது, இறுதி முடிவுகள் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும்,” என்றார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்