ஐரோப்பா

பிரான்ஸில் தாக்குதல் நடத்த திட்டம் : அல்ஜீரியாவை சேர்ந்த ஒருவர் கைது!

பிரான்சில் தாக்குதல்களை நடத்துவதற்காக தன்னைப் பின்பற்றுபவர்களை அழைத்தமைக்காக அல்ஜீரியாவை சேர்ந்த சமூக ஊடக பிரபலம் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தகவலை உள்துறை அமைச்சர் புருனோ ரீடெய்லியோ உறுதி செய்துள்ளார்.

பல்பொருள் அங்காடிக்கு எதிராக பாரிஸில் ஜனவரி 2015ல் நடத்தப்பட்ட கொடிய தாக்குதலின் 10வது ஆண்டு நிறைவை அனுஷ்டிக்க பிரான்ஸ் தயாராகி வருகின்ற நிலையில்  இந்த தாக்குதல் பற்றிய எச்சரிக்கை கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அல்ஜீரிய பிரஜை “Zazouyoussef” என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த தன்னை பின்தொடர்பவர்களை அழைத்ததாக உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த நபரின் வதிவிட ஆவணங்கள் காலாவதியாகியுள்ளதாகவும், அவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியிருந்ததாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்